18:14 |
Author: சாகம்பரி
கட்டங்களும் எண்களுமான
நாட்காட்டியில் ஊருகின்ற
வாழ்வியலின் நகர்வுகள்!
கட்டத்தினில் குறிப்பிட்ட
எண்களும் நிறங்களும்
நாளின் தன்மை கூறாது.
ஒரு ஏணியில் ஏறுவதோ..
பாம்புகடியில் சிக்குவதோ..
நொடிகளின் விளையாட்டு!
ஏணியின் படிகட்டுகளும்
பாம்பின் நீண்ட உடலும்
மாதக்கணக்கில் நீளலாம்!
நொடிகள் யுகங்களாகும்
யுகங்கள் நொடிகளாகும்
பரமபத விளையாட்டில்
பகடையாய் மாறுகிறோம்!
ஏணியிலிருந்து விழவும்,
பாம்பு தலை மிதிக்கவும்,
வித்தை தெரிந்தவனுக்கு
விளையாட்டில் வெற்றி!
ஏதும் கிட்டாதவனுக்கும்
அடுத்த கட்டம் உண்டு!
ஆனால்,
ஏணியை பாம்பெனவும்
பாம்பை ஏணியெனவும்
விதிமுறையை மாற்றி
விளையாடுபவனுக்கோ...
கட்டமே சிறையாகிவிடும்!
Category:
கவிதை,
சாகம்பரி கவிதைகள்
|
11 comments:
//ஏணியை பாம்பெனவும்
பாம்பை ஏணியெனவும்
விதிமுறையை மாற்றி
விளையாடுபவனுக்கோ...
கட்டமே சிறையாகிவிடும்!//
ஆஹா! அருமை.வாழ்த்துக்கள்.
நாம மட்டும் என்ன, ஒவ்வொரு அஞ்சு வருஷமும் பரமபதம் தான் விளையாடிகிட்டு இருக்கிறோம்... ஓட்டு வாங்கறவன் ஜெயிக்கிறான், ஓட்டு போடறவன் திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறான்
பரமபதம்:)
தங்கள் கவிதையின் கரு மிகவும் பிடித்திருந்தது
அதன் இறுதி வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு
அதை வேறு ஒரு உருவில் இன்று ஒரு
படைப்பாக்கி பதிவிட்டுள்ளேன்
சிந்தனையை தூண்டிச் செல்லும் அருமையான
கருவைக் கொண்ட படைப்பனைத் தந்தமைக்கு நன்றி
எனது பதிவு நன்றாக இருந்தால் அந்தப் பெருமை
உங்களைச் சாரும்
இல்லையெனில் அது என்னைச் சாரும்
தங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து..
நல்லதொரு அழகான கவிதை மேடம். நான் இப்போது தான் முதன் முதலாக இதைப் பார்க்கிறேன்.
லிங்க் மெயில் மூலம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
பாராட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல்.
ஓ அப்படியும் சொல்லலாமா?. நன்றி திரு.சூரியஜீவா
நன்றி திரு.மழை.
தொடர்வதற்கு நன்றி ரமணி சார். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk//வருகைக்கு நன்றி சார்
ஒரு ஏணியில் ஏறுவதோ..
பாம்புகடியில் சிக்குவதோ..
நொடிகளின் விளையாட்டு!
...................
ஏதும் கிட்டாதவனுக்கும்
அடுத்த கட்டம் உண்டு!
.................
நல்ல வரிகள், சிறப்பாக வந்திருக்கிறது கவிதை