20:00 | Author: Ravi
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
                                                   
           நாலடியார்.   


1. உங்கள் நண்பனுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து செய்யுங்கள்.
2. உங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் திணிக்காதீர்கள்
3. நட்பு உடையுமளவிற்கு எந்த விசயத்திலும் வாக்குவாதம் புரியாதீர்கள்.
4. தேவையான சமயதில் ஊக்கப்படுத்துங்கள்
5. நட்பில் பிழை பொறுத்தல் மிக அவசியம்.
6. உங்களைப்போலவே உங்கள் நண்பனும் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
7. அவர்கள் நன்றாக வாழ்ந்தாலும் அல்லது நிலை தாழ்ந்து போனாலும் விட்டு விலகாதீர்கள்.
8. இரகசியம் காக்கும் தன்மை உங்களிடம் இருப்பது நட்பை பலப்படுத்தும்.
9. அவர்களுடைய தவறுகளை மென்மையாக சுட்டிக்காட்டி சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள்


  இவை அத்தனையும் நல்லவன் என்று அடையாளம் கண்டு நட்பு கொண்டாடிய ஒருவனுக்காக செய்ய வேண்டும். எப்போதாவது மனிதர்கள் குணம் செயல் மாறுவது உண்டு.அந்த நிலையிலும் நண்பனை விட்டு நீங்காமல் அவனை நல்வழிப்படுத்துவது நட்பின் தன்மையாகும்.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 comments:

On October 28, 2011 at 12:33 AM , மனசாலி said...

உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
http://manasaali.blogspot.com/2011/10/02_21.html

 
On October 28, 2011 at 7:28 AM , Yaathoramani.blogspot.com said...

அருமையான தற்போதைய நிலையில்
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பாடல்
விளக்கம் மிக மிக அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள் த,ம 1

 
On October 28, 2011 at 9:29 AM , K.s.s.Rajh said...

அழகான பகிர்வு.....

 
On October 28, 2011 at 11:10 AM , SURYAJEEVA said...

இந்த வாரம் பலர் நட்பு குறித்து பதிவு போட்டபடி உள்ளனர், என்ன விஷயம்னு தெரியல? இருந்தாலும் அந்த மூன்றாவது குறிப்பு யார் சரி என்று விவாதிப்பதை விட எது சரி என்று விவாதித்தால் உறவு உடையாது என்பது என் எண்ணம்

 
On October 28, 2011 at 5:07 PM , இராஜராஜேஸ்வரி said...

இவை அத்தனையும் நல்லவன் என்று அடையாளம் கண்டு நட்பு கொண்டாடிய ஒருவனுக்காக செய்ய வேண்டும். எப்போதாவது மனிதர்கள் குணம் செயல் மாறுவது உண்டு.அந்த நிலையிலும் நண்பனை விட்டு நீங்காமல் அவனை நல்வழிப்படுத்துவது நட்பின் தன்மையாகும்/

நட்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>>

 
On October 30, 2011 at 5:33 PM , ADMIN said...

நட்பின் இலக்கணத்தை நயமாக விளக்கியுள்ளீர்கள்.. !! வாழ்த்துகளுடன்,

உங்கள் தங்கம்பழனி.

எனது வலையில் இன்று:

தமிழ்நாடு உருவான வரலாறு

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

 
On October 30, 2011 at 5:39 PM , ADMIN said...

வலைப்பூவை பின்தொடர்ந்திருக்கிறேன். நன்றி

 
On October 31, 2011 at 4:28 PM , G.M Balasubramaniam said...

நன்றாக அறிந்தவர்களே நண்பர்களாக முடியும். அறிந்தவர்கள் எல்லாம் நட்பாக முடியுமா.?உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. பெரும்பாலான இடங்களில் பரிச்சயப்பட்ட எல்லோரும் நண்பர்கள் என்று கொள் வதாலேயே எதிர்பார்ப்புகள் அதிகமாகி ஏமாற்றமும் கூடுகிறது. எடுத்துக் காட்டிய பாடல் அருமை. வாழ்த்துக்கள்.

 
On November 1, 2011 at 10:16 AM , அன்னைபூமி said...

உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்//மிக்க நன்றி

 
On November 1, 2011 at 10:17 AM , அன்னைபூமி said...

பாராட்டிற்கு மிக்க நன்றி ரமணி சார்

 
On November 1, 2011 at 10:19 AM , அன்னைபூமி said...

@K.s.s.Rajh said...
பாராட்டிற்கு மிக்க நன்றி

 
On November 1, 2011 at 10:22 AM , அன்னைபூமி said...

குறிப்பாக எதுவும் இல்லை. இந்த பதிவுகள் ஏற்கனவே சேமிப்பில் இருந்ததுதான். இன்னும் ஔவையின் மூதுரை போன்றவையும் தயாராக உள்ளன.
தங்களின் கருத்தும் உண்மையே. கருத்துரைக்கு நன்றி சார்.

 
On November 1, 2011 at 10:33 AM , அன்னைபூமி said...

@இராஜராஜேஸ்வரி said...
நட்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
//பாராட்டிற்கு மிக்க நன்றி.

 
On November 1, 2011 at 10:35 AM , அன்னைபூமி said...

தொடர்வதற்கு நன்றி. அங்கேயும் வந்து பார்க்கிறேன்.

 
On November 1, 2011 at 10:38 AM , அன்னைபூமி said...

@G.M Balasubramaniam said..

உணர்வுகள் வழி செல்லும் இந்த காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்கிறது. தங்களின் கருத்தை இன்றைய இளையவர்கள் புரிந்து கொண்டால் நல்லது வாழ்த்துக்களுக்கு நன்றி

 
On November 1, 2011 at 10:39 AM , அன்னைபூமி said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
பாராட்டிற்கு மிக்க நன்றி

 
On November 4, 2011 at 2:59 PM , உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

 
On November 5, 2011 at 5:41 AM , Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நல்ல கட்டுரை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.