17:41 | Author: சாகம்பரி
இந்த முறையும் நிராகரிப்பு
சென்ற முறை போலவே
வலி மிகுந்த கேள்விகள்
இப்போதும் எழுகின்றன
பசித்து அழும் பிள்ளையை
தேற்றும் தாயாக மனம்
ஆயிரம் பதில் சொல்கிறது
தோல்வியின் தடங்கள்
உள்ளே பதிந்து நின்றிட..
வெற்றிடம் உருவாகிறது
இன்றைய நிமித்தங்களும்
தோல்வி உலாவாகிவிட
சுற்றிலும் வெற்று மனிதர்!

பகல் முழுவதும் தேடலில்
சூன்யத்தை துலாவியபின்
கூடடையும் திரும்பல்கள்!
ஒவ்வொரு காலடிகளும்
முடிவுறா பாதையினை
காரிருளில் பதிப்பித்தன.
இமைமூட கண்கள் ஓய..
உறங்குவதும் சாக்காடோ?
கனவில் கேள்விகளுக்கு
ஒளிக் கீற்றாய் பதில்கள்!
எதுவோ புரிந்து போனது
கரைதட்டும் முடிவுவரை
முயற்சிக்க வேண்டும்....

விடியலில் பறவைகள்
மரத்திலிருந்து பறந்திட,
சோகமாய் பதிந்திருந்த
கடற்கரையின் தடங்களை
நேற்றைய இரவு அழித்திட,
இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது.



You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

21 comments:

On October 13, 2011 at 6:05 PM , SURYAJEEVA said...

மனவெளியும் காத்திருக்கிறது..

 
On October 13, 2011 at 6:27 PM , Anonymous said...

விடியலின் தடங்கள் வீரியக்கவிதை சகோதரி....காத்திருப்பில் முடிந்தாலும்...

 
On October 13, 2011 at 7:19 PM , yogi said...

nice.......

 
On October 13, 2011 at 7:42 PM , Unknown said...

வலைப்பதிவின் தலைப்பில் வானுயர நிற்கும் வரிகள் அருமை....
அற்புதமானக் கவிதை..

பாவம் மனம் தான் எப்படியெல்லாம் சமாதானம் சொல்கிறது...
பிள்ளையாய் அழும் மனதிற்கு அதுவே தாயாகுவது தான்...
பிள்ளையுள்ளும் தாய் ஒளிர்கிறாள்...

//இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது////
இந்த நம்பிக்கையும் அன்னை பூமி என்பதாலோ!!

கவிதையும் அது கருக்கொண்ட கருத்தும் நன்று சகோதிரி..

 
On October 13, 2011 at 7:55 PM , Yaathoramani.blogspot.com said...

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்கிற
மகாகவி பாரதியின் சுந்தர வரிகளுக்கு
விளக்கம்போல் தாங்கள் கொடுத்துள்ள பதிவு
அருமையிலும் அருமை
விடிதல் என்பது பூமிக்கு மட்டுமா
மனதுக்கும் தானே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

 
On October 13, 2011 at 9:31 PM , M.R said...

அருமை சகோதரி

 
On October 13, 2011 at 9:34 PM , M.R said...

tamil manam 2

 
On October 13, 2011 at 10:04 PM , வை.கோபாலகிருஷ்ணன் said...

//பசித்து அழும் பிள்ளையைதேற்றும் தாயாக மனம்ஆயிரம் பதில் சொல்கிறது - தோல்வியின் தடங்கள்உள்ளே பதிந்து நின்றிட..வெற்றிடம் உருவாகிறது//

//எதுவோ புரிந்து போனது
கரைதட்டும் முடிவுவரை
முயற்சிக்க வேண்டும்....//

விடியலின் தடங்களில்
தோன்றிடும் அழகான பல வரிகள்
கொண்ட இந்தக் கவிதையும் அழகு.

பராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

 
On October 13, 2011 at 10:10 PM , ஆயிஷா said...

கவிதை அருமை

 
On October 14, 2011 at 7:35 AM , K.s.s.Rajh said...

////விடியலில் பறவைகள்
மரத்திலிருந்து பறந்திட,
சோகமாய் பதிந்திருந்த
கடற்கரையின் தடங்களை
நேற்றைய இரவு அழித்திட,
இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது.////

மனதைத்தொடும் வரிகள் சூப்பர் பாஸ்

 
On October 14, 2011 at 7:24 PM , சாகம்பரி said...

நன்றி திரு.ஜீவா.

 
On October 14, 2011 at 7:24 PM , சாகம்பரி said...

கருத்துரைக்கு நன்றி சகோ.

 
On October 14, 2011 at 7:25 PM , சாகம்பரி said...

வருகைக்கு நன்றி திரு.தமிழ் விரும்பி. பாராட்டுக்கள் மகிழ்விக்கின்றன.

 
On October 14, 2011 at 7:25 PM , சாகம்பரி said...

Thank you very much Mr.Yogi

 
On October 14, 2011 at 7:26 PM , சாகம்பரி said...

அருமை சகோதரி //கருத்துரைக்கு நன்றி சகோ.M.R

 
On October 14, 2011 at 7:27 PM , சாகம்பரி said...

மிக்க நன்றி VGK சார்.

 
On October 14, 2011 at 7:28 PM , சாகம்பரி said...

மகாகவி மற்றும் ஔவை பாட்டியை தாண்டி ஒரு சிந்தனை உண்டா திரு.ரமணி சார். நன்றி சார்.

 
On October 14, 2011 at 7:29 PM , சாகம்பரி said...

வாங்க ஆயிஷா. கருத்துரைக்கு நன்றி.

 
On October 14, 2011 at 7:29 PM , சாகம்பரி said...

மனதைத்தொடும் வரிகள் சூப்பர் பாஸ்
// மிக்க நன்றி திரு.ராஜா

 
On October 14, 2011 at 7:33 PM , shanmugavel said...

மனம் கவர்ந்த கவிதை.

 
On October 19, 2011 at 10:36 PM , இராஜராஜேஸ்வரி said...

இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது./

அருமை