21:00 |
Author: சாகம்பரி
என்னவோ ஒரு தாளத்தில்
இதயம் ஓயாமல் துடிக்குது.
குழந்தையின் மழலையை...
குழலின் இனிமையை விட
ராகம் மாறாமல் கேட்குது
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!
எண்ணங்கள் கைகூடிடும்
சில சமயம் வேகம் கூடும்.
ஆகாயத்தில் தாவி குதிக்க
அலைஅலையாய் மிதக்க
காற்றேணியில் ஏறி உலவ
தண்டவாளத்து குதிரையின்
தடதடக்கும் தாளம் வரும்.
மனது முரண்டு பிடிக்கும்
சில சமயம் சோகமாகும்!
சுவாசித்தலே சுமையாக...
எழுந்து நிற்கவே சோம்பி,
கைகளில் முகம் புதைத்து,
கண்கள் மூடி இருள் தேடி..
நத்தை அடியோசை ஒற்றி
மெதுவாக தாளம் மாறும்!
எப்போதாவது....
யாருமற்ற தனிமையில்
துயர் புதைந்த மௌனத்தில்
உணர்வுகள் மரத்துபோய்
பசித்தீயில் வெந்துபோய்
உணவே அருமருந்தென....
யாசகம் கேட்கும் கைக்கு
பதில் சொல்லி பாருங்கள்
புதிதான தாளக்கட்டுடன்
உள்ளுக்குளேயே கேட்கும்
உலகத்தின் இனிய இசை!
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!
16 comments:
மனது முரண்டு பிடிக்கும்
சில சமயம் சோகமாகும்!//
இது இல்லையினா மனசே இல்லை.
நம்ம தளத்தில்:
இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...
//எப்போதாவது....
யாருமற்ற தனிமையில்
துயர் புதைந்த மௌனத்தில்
உணர்வுகள் மறத்துபோய்
பசித்தீயில் வெந்துபோய்
உணவே அருமருந்தென....
யாசகம் கேட்கும் கைக்கு
பதில் சொல்லி பாருங்கள்
புதிதான தாளக்கட்டுடன்
உள்ளுக்குளேயே கேட்கும்
உலகத்தின் இனிய இசை!//
இதை கற்பனையில் நினைத்துப் பார்த்தாலே இனிய இசை புதிய தாளக்கட்டுடன் உள்ளுக்குள்ளேயே கேட்க ஆரம்பிப்பது போலத் தோன்றுகிறது.
பிறர் பசியை ஆற்றுவது தான் உண்மையான இன்பம் என்பது நன்கு புரிகிறது. அழகான கவிதைக்கு நன்றி.
தமிழ்மணத்தில் உங்களுக்கு பதிலாக நானே முதல் வோட் போட்டுவிட்டேன். நீங்கள் இரண்டாவது வோட் போட்டுக்கொள்ளுங்கள். vgk
//அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!//
அருமை.
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்/
இதயத்தின் இசை இன்பமாகும் அதிசயம்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்//
பிடித்த வரிகள்..
கவிதை சிறப்பு சகோதரி...
இசையாய் லயமாய் தாளத்துடன் மனதில் பதியும் கவிதை இது!
மனதின் வெவ்வேறு நிலைகளை தன் இசையால் உணர்த்துகிறது இதயம் என்பதை மனம் கவரும் மெல்லிசைபோல் சொல்லிச்செல்கிறது உங்கள் கவிதை!
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.
மனதுக்கு எப்போதும் இசைவாகவேச் செல்லும்
இந்த உயிரோசையை இதமாக வைத்துக் கொள்ளத்
தெரிந்து கொண்டாலே (உடலின் ) வாழ்வின் பாதித் தொல்லைலைகள்
களைந்துபோகும் என்பதை உணர்ந்தவர்கள் புத்திசாலிகள்
அதை அடி நாதமாகச் சொல்லிப் போகும் உங்கள் பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஓன்று...
சூப்பர் கவிதை
இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
இசைமீதான மயக்கத்தை அழகாய்ச் சொல்லும் கவிதை!
வாழ்த்துக்கள்.,
ஆஹா,
இதயத்தின் இதமான இசையொலி - அது
உதயமாகும் உன்னத மணித்துளி(கள்).
கனத்த இதயமது காற்றில் மிதக்கும் தருணமதை
ஏற்றமுடன் கூறிய ஏகாந்தம் நன்று.
கவிதை அருமை....
நன்றிகள் சகோதிரி.
அவ்வப்போது தாளம் மாறி இசையாகஇல்லாமல் இதயம் துடிக்கத் துவங்கினால்... ?தன் இருப்பை உணர்த்தாமல் துடிக்கும் இதயமே நல்லிதயம்.