11:14 | Author: சாகம்பரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் கிட்டிய கடல்வாழ் உயிரினங்களின் படிமம்....
நாயினார் தீவில் கிட்டிய தமிழ் கலந்த நாகர் மொழியுருக்கள்.....
இன்னும் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்களை புரட்ட புரட்ட பல விசயங்கள் கிட்டுகின்றன. ஒரு பெரும் நிலப்பரப்பும்
தில் வாழ்ந்த மாந்தரில் பெரும்பான்மையானோரும் அழிக்கப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற மக்களின் மனக்கிலேசங்கள் செவிவழிச் செய்திகளாகவும் கதைசொல்லிகளின் மூலம் கதைகளாகவும் கிட்டுகின்றன. வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படும் கண்ணகியின் கதையும்,  'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர்  இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன. எழு கடல் என்றால் பொங்கியெழுந்த கடல் என்றும் எழுமலை என்றால் எரிமலையையும் குறிக்கிறது என்பது மெய்யா? எரிமலை சீற்றம் கண்ட கடல் கொண்ட என் நாடு எங்கேயோ இருக்கிறது என்பதை குறித்த வாக்கியம் என்பதும் பொருந்தி வருகிறதே. தொல்லியல்,மரபியல்,கடலியல் சார்ந்த ஆய்வுகள் நடத்திதான் உண்மையை வெளிக்கொணர முடியும். அதுவரை நம் தொலைந்து போன பெருமைகளை மறந்து இருக்க வேண்டும். 

இப்போது நாம் இந்த தொடரின் தலைப்பிற்கு வந்தாக வேண்டும்.....

மனோ சக்தி பற்றி அறியும் முன், மனம் என்பதன் விளக்கம் வேண்டும். சூட்சும உடல்... ஸ்தூல உடல்....  ரொம்பவும் ஆன்மீக விளக்கமாக போய்விடும் என்பதால் இந்த இடத்திற்கு ஒப்புதலாக உயிர் எனப்படும் ஆன்மாவையே மனம் என்று கொள்கிறேன். உடல், உயிர் இரண்டும் சேர்ந்ததுதான் நாம். இவை இரண்டையும் இணைக்கின்ற வித்தை நம்மிடம் இல்லை -அதாவது சாதாரண மனிதர்களிடம் இல்லை. உடலுக்கு காலத்தின் கட்டுப்பாடு உண்டு. உயிருக்கு கிடையாது. உடலுக்கு சக்தி குறைவு, வேகமும் குறைவு ஆனால் உயிருக்கு சக்தியும் வேகமும் அதிகம். எனவே உடலில் இருந்து உயிர் விலகியும் சேர்ந்தும் இருக்கும் வித்தை தெரிந்து கொண்டால் நான் சித்தனாகிவிடுவேன் - அதாவது நான்காவது பரிமாணத்தை கடந்துவிடுவேன். எங்கெல்லாம் நான்காவது பரிமாணத்தின் கட்டுப்பாடு இல்லையோ அங்கெல்லாம் நரை,திரை,மூப்பு,பிறப்பு,இறப்பு கிடையாது. உடலில் இருந்து விடுபட்டுவிடுவதால் ஐந்தாம் பரிமாணத்தில் செயலாற்ற முடியும் - மனோவேகம், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பிரசன்னமாகலாம்.

( மரணத்திற்குப் பின் மனிதர்கள் அதிவேகமாக இருக்கும் வேறு பரிமாணத்தை அடைந்துவிடுவதாகவும் அவர்கள் நம்முடனும் இருக்கிறார்கள் என்றும் சித்தர் பாடல் ஒன்று கூறுகிறது.  கரியபவளம் என்ற மூலிகையை விளக்கெண்ணெயில் குழைத்து புருவத்தில் தடவிக் கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் மற்றோரு பரிமாணமும் அங்கே இருப்பவர்களும் தெரிவார்கள் என்றும் அந்த பாடல் மேலும் கூறுகிறது. பரிட்சித்து பார்க்கும் மனதைரியம் எனக்கில்லை. யாராவது முயற்சித்தால் சொல்லுங்கள்.)

இதெல்லாம் ஆன்மீகக் கட்டுக்கதைகள் என்று தோன்றுகிறதல்லாவா? நான் முதலிலேயே குறிப்பிட்ட worm hole theory இன்ன பிற வார்த்தைகளில்... இதனைத்தான் சொல்கிறது -. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே புழுத்துளைகள் எனப்படும் மர்மமான துளைகள் உள்ளன. அவற்றின் வழியே பயணிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் அதி தொலைவில் உள்ள இடத்தைக்கூட நொடிகளில் அடையமுடியும். அப்படித்தான் பிரசித்தி பெற்ற 'வாவ்' சிக்னலும் 72நொடிகள் மட்டும் கிட்டியது என்று ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். இதனை நிருபிப்பதற்காக வார்ம்ஹோல்களை தேடிவருகின்றனர். பிரச்சினை என்னவென்றால் வாவ் சிக்னலை எழுப்பிவிட்டு நொடிகளில் மறைந்துபோன அந்த 'யாரோ' ஒருவருக்கு வார்ம் ஹோலில் பயணம் செய்வதற்கான நுட்பங்களும், அதிவிரைவு பயணத்தை எதிர்கொள்வதற்கான தகுதிகளும், சக்தியும் இருந்தன, அது நம்மிடம் இல்லை. .... அப்படியென்று சொல்லுகிறார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி....  இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் நம் விருப்பத்திற்கே இருக்கட்டும். அறிவியல் தேடலாகவோ இல்லை ஆன்மீகத் தேடலாகவோ இருக்கட்டும்.

என்னுடைய பதிவும் வான்வெளி சஞ்சாரத்தில் நீண்ட நாட்கள் டிஜிட்டல் அலைகளாக பயணிக்க வாய்ப்பு இருப்பதால்...எதிர்காலத் தேவை கருதி இன்னும் சற்று கூடுதலாக பதிவிடுகிறேன். இதற்கு அறிவியல் விளக்கமெல்லாம் தற்சமயம் இல்லை. அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம்.

அடுத்த பகுதியில் ஏழாம் அறிவான மரபியல் நினைவுகளும், ஐந்தாம் அறிவான மனோசக்தியும் பற்றிய சில விசயங்களை -(பழங்கதைகள்) பேசலாம்.



முந்தைய பதிவுகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html
5ம் பாகம்:   பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
6ம் பாகம்    
பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
7ம் பாகம்     பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On November 24, 2011 at 11:26 AM , சி.பி.செந்தில்குமார் said...

>>>>அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம்.

haa haa வெயிட்டிங்க்

 
On November 24, 2011 at 11:46 AM , SURYAJEEVA said...

உயிரும் ஆன்மாவும் வேறு வேறு என்று ஒருவர் எழுதி கொண்டிருக்கிறார்... நம் உடலில் உள்ளது பல்லாயிரக் கணக்கான உயிர்கள்.. இறந்ததாக அறிவிக்கப் பட்ட பின்னும் கண்ணில் உள்ள உயிர் நான்கு மணி நேரங்களுக்கு பிரியாமல் இருக்கின்றது... நீங்கள் கூறும் மனது என்பது உயிர் அல்ல... மாறாக நம் மூளையில் உள்ள செயல்பாடு... biological psychology என்று ஒரு புத்தகம் இருக்கும்.. படித்து பாருங்கள்... நீங்கள் கூறும் மனது உடலின் ஒரு அங்கமே... தொடர்ச்சி என்பதால் விவாதிக்க கடைசி பகுதி வரும் வரை காத்திருக்கிறேன்..

 
On November 24, 2011 at 12:19 PM , சாகம்பரி said...

சரி சரி வாருங்கள். நன்றி சிபி சார்.

 
On November 24, 2011 at 12:20 PM , சாகம்பரி said...

நீங்கள் கூறும் உயிர்கள் அந்தந்த பகுதிகளின் மின் துடிப்புகள். இவற்றை பதிவிடவும் முடியும் -EEG,EMG,ERG,ECG எனப்படுவது ஒரு மின் காந்த புலத்தில் அசையும் மின் கடத்தியை வைத்தால் ஏற்படும் மின்னோட்டமே இவற்றின் ஆதாரம்.

. ஒரு உடலுக்குள் பல உயிர்கள் இருந்தால் மரணம் என்பது எதனை குறிப்பிடுகிறது?. பின் ஏன் அவரால் வாழ முடிவதில்லை. இத்தகைய துடிப்புகளை செயற்கையாகவும் நிகழ்த்த முடியும். உ-ம், பேஸ் மேக்கர் வைத்து இதயத்தை துடிக்க வைப்பது. ஆனாலும் ஒரு கட்டத்தில் அதுவும் பலனிப்பதில்லையே ஏன்? மரணித்தல் என்பதை துடிப்புகளின் நிறுத்தம் என்று வரையறுக்கும் அறிவியல் கோட்பாடு இதனை சொல்லலாம். ஆனால் மரணித்த பின் முக்கியமான ஏதோ ஒன்று அந்த உடலில் இல்லாமல் போகிறதே அதற்குப் பெயர் என்ன? தமிழில் உயிர் என்றுதான் சொல்கிறார்கள். நானும் அதனைத்தான் குறிப்பிடுகிறேன்.

தொடர்ந்து கேள்வி கேளுங்கள் தோழர். என்னுடைய தேடல்கள் விரிவடையும். மிக்க நன்றி.

 
On November 24, 2011 at 12:20 PM , பால கணேஷ் said...

மனோ சக்தி பற்றிப் பேசவும் விவாதிக்கவும் நிறைய உள்ளன. படித்துவிட்டு விவாதம் செய்கிறேன். பகிர்தலின் மூலம் தானே நாம் வளர முடியும்....

 
On November 24, 2011 at 6:31 PM , Anonymous said...

Interesting...I will catchup...sis...

 
On November 25, 2011 at 12:52 AM , இராஜராஜேஸ்வரி said...

'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர் இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன./

சிந்திக்கவைக்கும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

 
On November 29, 2011 at 11:32 AM , திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான பகிர்வு. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

 
On December 26, 2011 at 5:19 PM , Shakthiprabha (Prabha Sridhar) said...

//உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி.... இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் நம் விருப்பத்திற்கே இருக்கட்டும். அறிவியல் தேடலாகவோ இல்லை ஆன்மீகத் தேடலாகவோ இருக்கட்டும்.
//

நன்று. தொடர்கிறேன்....

 
On March 22, 2012 at 1:26 AM , kowsy said...

உடலுக்கு உயிருக்கும் உள்ள தொடர்பு பற்றிய எண்ணங்கள் விரிவு பட்டதே . உயிர் வேறானால் , ஆபரேஷன் செய்கின்றபோது உடலை மயக்கி உடலை வெட்டுவார்கள் ஆனால் அது எப்படி நடக்கின்றது என்பது உயிருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் மயக்கம் தெளிந்து எழும்பும் போது எதுவுமே தெரிவதில்லையே . என்னைப் பொறுத்தவரையில் எமது மூளைதான் எல்லாம் என்று நம்புகின்றேன்.