17:49 | Author: சாகம்பரி

இப்போது மனோசக்தியை வலிமை செய்யும் எளிமையான வழிமுறையை பார்க்கலாம்.
கொஞ்சம் பாஸிடிவ் எண்ணங்களை மனதில் பதிந்து கொண்டால் நமக்குத் தேவையானதை அடையும் மனஉறுதி நம்மிடம் இருக்கும். வயிற்று பகுதி பயிற்சி எளிதில் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கும். இதனால் எதிர்காலத்தில் நாம் அவசரப்பட்டு தவறுகளை செய்ய மாட்டோம். மூளைக்கு செலுத்தப்படும் இரத்தம் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். இதனால்  நல்ல விசயங்கள் பதியப்படும். நம்மைபற்றிய ஹை-எஸ்டீம் (உயர்வான இமேஜ்) நம்முள் உருவாக்கப்படும். இதயத்தின் சுவாசம் மனஉறுதியை அதிகரிக்கும். அதில் தூய்மையான எண்ணங்கள் கலக்கும்போது மனோசக்தி அதிகரிக்கும். அன்-ஷேக்கபல் என்று சொல்வார்களே அதுபோன்ற தளராத மனம் கிடைக்கும்.
இத்தனை ப்ராஸஸ்களும் செய்வது ஒன்றைத்தான். எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை பதிய வைப்பது. இந்த எண்ணங்கள்தான் நமக்கு தேவையான மனோசக்தியை தரும். உடலுக்கு சக்தி தரும் ஊட்டசத்துக்கள்போல, இந்த ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு  நாம் தரும் விட்டமின் ஆகும். நாம் ஒரு பிரச்சினையை கவனப்படுத்தவும், தீர்வுகளை தேடித்தரவும், செய்யும் செயல்கள் வெற்றியடையவும் இது உதவும். (இது ரொம்பவும் அடிப்படையான பாடம்தான். இதை வைத்து ஹெலிகாப்டரை பறக்க விடுவது, நோக்கு வர்மம் செய்வது என்பதெல்லாம் முடியாது.)
செய்யும் செயல்கள் வெற்றியடைய தளராத முயற்சி வேண்டும். வழிகளை தேடிக் கொண்டே இருக்க வேண்டும். இது நம்முடைய மனதினை பொருத்ததுதான். நான் நல்லதுதானே நினைக்கின்றேன்… நான் எந்த தவறும் செய்யவில்லையே… நியாயமாக எனக்கு வேண்டியதை பெற விழைகிறேன்… கண்டிப்பாக இதற்கு ஒரு வழி இருக்கும். என்ற உறுதியை தந்து தேடலின் பாதையில் பயணிக்க வைக்கும். இதற்குதான் நம்மை பற்றிய ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
இப்போது விசயத்திற்கு வரலாமா? இத்தனை பயிற்சி எடுத்துதான் மனோசக்தியை செயல்பட வைக்க முடியும் என்றில்லை. எளிதான வழிதான். நம்மை பற்றி ஹை-எஸ்டீமை நம் மனதிற்குள் பதிய வைக்க வேண்டும்.        
இதனை ரிவர்ஸ் பார்முலா என்று சொல்லலாம். நம்ம மனசு ரொம்ப சுத்தம் என்ற வார்த்தையை பதிய வைக்க மூச்சு பயிற்சிதான் அவசியம் என்று இல்லை.  நம்மை பற்றிய  பாஸிட்டிவ்  இமேஜை மனதிற்குள் உருவாக்க நல்ல விசயங்களை பதிய வைக்க வேண்டும். நம்மை நாமே சபாஷ் என்று சொல்லி பாராட்டும் செயல்களை செய்ய வேண்டும்.
பரிட்சையில் முதலிடம் வருவது, ஹெச்ஆரிடம் நல்ல ரிமார்க் வாங்குவது… பாங்க் பாலண்ஸ் வைத்திருப்பது, சொந்தமாக வீடு வைத்திருப்பது, ம்… அழகான படித்த மனைவி… இதெல்லாம் சபாஷ் போட வைக்காது. மனிதாபிமானம் மிக்க செயல்கள் செய்யும்போது நம் மனம் நம்மை வாழ்த்தும். பாஸிட்டீவ் நோட்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளும்
பரிட்சையில் தோல்வியுற்றாலும் தளர்வடைய வைக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைக்கும். வேலைபறி போனாலும் நம்மை பொறுப்புடன் சிந்திக்க வைத்து வருமானத்திற்கான வழியை தேட வைக்கும். குடும்பத்தினருடன் சண்டையிட வைத்து நம்மை பிரித்து வைக்காது.
மனிதாபிமானம் மிக்க செயல்கள் என்ன செய்யலாம்?
Caring and nurturing இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். இதுதான் நம்மைபற்றிய ஹை-எஸ்டீமை நமக்குள் பதிய வைக்கும்.  இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று நான் சொல்வதைவிட நீங்களே ஒரு லிஸ்ட் தயார் செய்யுங்களேன். அன்னதானம் செய்வது… இறைவனுக்கு பூஜை… அநாதை இல்லைத்திற்கு நன்கொடை… கும்பலாக சேர்ந்து கொண்டு தண்ணீர் பந்தல் வைப்பது… இதெல்லாம் இல்லை. இவையெல்லாம் வேல்யு கூட்டுவது மட்டுமே. தவிர இவற்றை எப்போதாவதுதான் செய்வோம்.
ஒரு நாளைக்கு ஒரு முறையேனும்   நம் ஆழ்மனம் நம்மை பாராட்டிக் கொள்ளும் செயல்களை செய்ய வேண்டும். சின்ன சின்ன செயல்கள்… உங்கள் பார்வையிலேயே படும்…
மனிதாபிமானம்… மனித அபிமானம்… சகமனிதர்களை   நேசிப்பது மட்டும் அல்ல. நம்மை நாமே மனிதனாக உணர்வது. இதுதான் மிக உயர்வானது. இந்த நிலையை சில செயல்கள் மட்டுமே பெற்று தரும்.  உதாரணமாக,
பேருந்தில் பயணிக்கிறோம். ஒரு வயதான பெரியவர் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டே வருகிறார். தடுமாறியபடி அவர் நிற்கும்போது மனம் பதைக்கிறது (மனம் பதைத்தால் நல்லது… உங்களுக்குள் ஒரு நல்ல மனம் இருக்கிறது என்று பொருள்). நாமும் நின்று கொண்டே செல்வதால் அவர்க்கு உதவ முடியாத நிலை. அந்த சமயத்தில்  யாராவது இருக்கையை விட்டு எழுந்து நின்று அவருக்கு இடம் தந்தால்… நமக்குள் ஒரு நிம்மதி வரும் பாருங்கள்… அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் லிஸ்டில் இடம் பெற வேண்டும்.
எந்த செயலை செய்தால் இரவு உறங்கும்முன் நினைவிற்கு வந்து நிம்மதியை தருகிறதோ… போற்றத்தக்க நல்ல செயல்களை செய்வது மட்டுமல்ல…  தவறு என்று மனம் நினைக்கும் செயல்களை செய்யாமல் இருப்பதுகூட நல்லதுதான். அது எல்லாமே ஹை-எஸ்டீம் லிஸ்ட்தான். எப்படி உடலுக்கு ஊட்ட சத்து மிக்க உணவுகள் தேவையோ அதுபோல, இதுதான் மனதிற்கு நாம் தரும் உணவு. நட்ட விதை முளைத்து பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும்போது, மனதிற்குள் இருக்கும் குப்பைகள் நாளடைவில் மக்கிப் போய்விடும்.
ஒரு இக்கட்டில் நாம் மாட்டும்போது ‘மாட்டிகிட்டாயா?’ என்று எக்காளமிட்டு குத்தி காட்டி நம்மை சாய்க்கும் வேலையை செய்யாது. ஒரு தவறும் நாம் செய்யவில்லை… இதுவும் கடந்து போகும் என்று தேற்றும். வழிகள் சொல்லி தரும். வெற்றி பெறுவோம் அழுத்தமாக எண்ண வைக்கும்.
எளிதாக சொல்லப் போனால்  நிறைய நல்ல விசயங்களை செய்யுங்கள், அது  நேர்மறை ஆற்றலை உங்கள் மனதிற்கு தரும். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து போகும்.

இதுதான் அந்த காலத்து ரகசியம். இலகுவாக இருக்கும் மனம் சக்தி மிக்கதாக இருக்கும்!. அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையை எப்போதும் மனதிற்குள் கிளப்பும் இந்த காலகட்டத்தில் மனதை தொலைத்து விட்டு சிறிய விசயங்களைக்கூட சிக்கலாக்கி கொள்வோம்.  தேற்றுவாரும் போற்றுவாரும் இல்லை என்ற நிலையிலும் மனோசக்தி நமக்கு உதவும்.  சரியாக இதனை பயன்படுத்தி நம் வாழ்க்கையை கை கொள்ளுவோம்.!
நன்றி  
(முற்றும்)
Category: | Leave a comment
17:37 | Author: சாகம்பரி

மனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி? உண்மை என்னவெனில் நம் அனைவரிடமும் மனோசக்தி இருக்கிறது. ஒரு பொக்கிஷம்போல்… ஆனால் தூசு படிந்து இருக்கிறது. அதை தூய்மைபடுத்தி விட்டால் இந்த சக்தி நமக்கு பயன்படும்.

மனோசக்தியை ஆக்டிவேட் செய்யத் தேவையானதாக சொல்லப்படுவது மூச்சு பயிற்சி.  ஆழ்ந்த மூச்சை இழுத்து விடும்போது நமக்குள் என்ன நடக்கிறது?

உடலின் உள்ளுறுப்புகளுக்கு இரத்தம் பாய்ச்சப்படுகிறது. ஆக்ஸிஜன் சக்தி செலுத்தப்படுகிறது. அட, சுவாசித்தல் என்பது நுரையீரல் மட்டும் தொடர்புடைய விசயம் அல்லவா? ஆனால், உள்ளுறுப்புகள் எவ்வளவோ இருக்கின்றனவே… அதையெல்லாம் மூச்சுப்பயிற்சி ஆக்டிவேட் செய்யுமா என்று கேட்க தோன்றும்.

செய்யும் என்பதுதான் உண்மை. மூச்சை இழுத்து விடும்போது வயிற்று பகுதிக்கு இரத்த சுழற்சி ஏற்படும்… இதயத்திற்கு இரத்தம் செலுத்தப்படும்… மூளைக்கு இரத்தம் செலுத்தப்படும். அந்தந்த இடத்தில் கவனம் வைக்கும்போது நாம் உணர முடியும்.

பிரணயாமம் செய்யும்போது மூக்கில் ஏற்படும் காற்றின் சுழற்சி மூளைக்கு இரத்தம் செல்லுவதை உணர வைக்கும்.  நெற்றி பொட்டில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையும்.

மார்புகூடு விரிவடையும் வண்ணம் ஆழ்ந்த மூச்சை  இழுக்கும் போது இருதயத்திற்கு இரத்தம் செல்கிறது.

அதேபோல வயிற்றில் கையை வைத்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியிடும்போது வயிற்று பகுதிக்குள் குளுமை பரவுவதை உணர முடியும்.

இவைதான் நான் முதலில் தெரிவித்திருந்த மனோசக்தியை ஆளுமை செய்யும் மையங்கள்! இவைதான் மனோசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள நான் சொல்வதை முயற்சித்து பாருங்கள். மந்திரமாக நினைத்து சொன்னாலும் சரி… அழுத்தமான வார்த்தைகளாக சொல்லிப் பார்த்தாலும் சரி.

ஓம் என்று அழுத்தமாக உச்சரியுங்கள்… நெற்றிபொட்டில் மாற்றம் தெரியும். இது மூளைக்கான ஆக்டிவிட்டி!  நமசிவாய என்று சொல்லிப் பாருங்கள்  நெஞ்சுகூடு விரியும். வயிற்றில் கை வைத்துக் கொண்டு சம்போ என்று சொல்லிப்பாருங்கள் ‘ச’ உள்ளிழுக்கப்படும் காற்று ‘போ’ உச்சரிக்கும்போது வாய் வழியாக வெளியேறும். அது வெப்பமான காற்றாக இருக்கும்.

என்ன மந்திர பயிற்சி சொல்லித் தருகிறீர்களா என்று கேட்க வேண்டாம். வார்த்தைகள்தானே மந்திரம். இந்த உச்சரிப்புகள் தரும் அதிர்வுகளை எத்தனையோ வார்த்தைகள் செய்கின்றன. அவற்றில் சில மந்திரங்களாக இருக்கின்றன அவ்வளவுதான்.

சரி, இப்போது நாம் ஒரு விசயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். மூளை இருக்கும் தலைபகுதி, இதயம் இருக்கும் மார்பு பகுதி, வயிற்று பகுதி இவற்றில் ஏற்படும் மாறுதல்கள்தான் மனதை பாதிக்கின்றன. சரி, மூச்சு பயிற்சியின் மூலம்… நம்மால் இந்த பகுதிகளை தனித்தனியே ஆக்டிவேட் செய்ய முடியும் என்பது புரிகிறது அல்லவா?

மேலோட்டமான உணர்வுகளுக்கு வயிற்று பகுதி… திட்டமிடுதல்,  நினைவுகளை கையாளுதல் இவற்றிற்கு மூளை பகுதி… உறுதியான எண்ணங்களுக்கு இதயப்பகுதி என்று பிரிந்து செயல்படுகிறது.
இப்போது நாம் மூச்சு பயிற்சியை தொடங்குவோமா? முதலில் கையை வயிற்றில் வைத்து சம்போ என்று உச்சரித்து இரத்த ஓட்டத்தை  வயிற்று தசைக்கு மாற்றுங்கள். வாய் வழியே குளிர்ந்த காற்று உள்ளே செல்லும். சூடான காற்று வாய் வழியே வெளியேறும். வயிற்றின் வெப்பம் குறையும். இதை நீங்கள் எளிதாக செய்ய முடியும். பத்து நிமிடங்கள் இதை செய்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். டென்சன் குறைந்திருக்கும். சந்தேகம், பய உணர்வுகள் இருக்காது. கவலைகள் குறைந்து இயல்பாக சிரிக்கவும் முடியும்.

அடுத்து கண்களை மூடிக் கொண்டு மூக்கின் வழியே சுவாசித்து பாருங்கள். மூளைக்கு இரத்த ஓட்டம் பாயும் பயிற்சி.  புருவங்களுக்கு மத்தியில் கவனம் வையுங்கள். ஒரு நிமிடம்கூட தொடர்ந்து இதை செய்ய முடியாது. ஏனெனில்  இதை செய்யும்போது நமக்குள் இருக்கும் நினைவுகள் தூண்டப்படும். நம்மைபற்றிய நல்லது கெட்டது எல்லாம் நினைவிற்கு வரும். மனம் அமைதியாக இருக்காது. சுவாசிப்பதில் இருந்து கவனம் சிதறிவிடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கல்தான்! 

உண்மையில் நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை இங்கேதான் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் தொடர்ந்து முயற்சித்தால், நம்முடைய எண்ணம் பலிதமாக தேவையான செயல்பாட்டு முறைகள் வடிவு பெறும் .உதாரணமாக, நமக்கு ஒரு வேலை தேவை… அதற்கான அடிப்படை தகுதிகள் நம்மிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை… தகுதிகள் இருந்தும் வேறு ஏதும் தடை உள்ளதா… அட்டிட்யூட் பிராப்ளம் போன்றவை… இதையெல்லாம் நம்மால் ஆய்வு செய்ய முடியும்.  நம்மை நாம் அறியும் இடமும்  நேரமும் இதுதான்!

அடுத்து இதயப்பகுதி சுவாசத்தை கவனியுங்கள். இதுதான் மனோசக்தியை வெளிக்கொணரும் முக்கியமான இடம்.  நெஞ்சில் கைவைத்துக் கொண்டு நீங்கள் கண்ணைமூடி சுவாசிக்கும்போது பழைய சம்பவங்கள், வெற்றி தோல்விகள், கடந்த காலத்தில் செய்த தவறுகள், ஒரு காலத்தில் நம்மிடம் இருந்த போற்றத் தக்க குணங்கள், கொள்கைகள், இனிமையான உறவுகளின் நினைவுகள் அடிமனதிலிருந்து வெளிக் கொணரப்படும்.இதுவரை இழந்தது பெற்றது அத்தனையும் நினைவிற்கு வரும். இங்கேயும் மூச்சை கவனிப்பதை விட்டுவிடுவோம். 

அடிமனதிலிருந்து எழும் நினைவுகளால் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். அது தவறுகளை கரைக்கும் விதமாகவும் இருக்கும். நம்மைபற்றிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் கண்ணீராகவும் இருக்கும். நமக்கு முன் யாரோ இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டால் கொஞ்சம் புலம்பவும் செய்யலாம். இந்த உணர்வு  நம்மை தேற்றும்.

இதெல்லாம் ஆரம்ப கட்டம்தான். இந்த விசயத்தை செய்ய செய்ய, நம்மை நன்றாக புரிந்து கொண்டு விடுவோம். நமக்கு முன் அமர்ந்து இருக்கும் நீதிபதி நம் குறைகளை கேட்க ஆரம்பித்து விடுவார், அதற்கான நியாயத்தையும் தருவார். அந்த நீதிபதிதான் நம்முடைய ஆழ்மனம். அடிமனதில் இருக்கும் தங்கியிருந்த எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி விடும். ஆழ்மனம் தெளிவாக இருக்கும். குற்றமற்ற நெஞ்சம்தான் மனோசக்தியின் அடிப்படை தேவையாகும்.
மற்றவை அடுத்த வரும் கடைசி பகுதியில்.


Category: | Leave a comment
13:28 | Author: Ravi
மருத்துவமனையின் நாற்காலிகள்
அழுகையையோ சிரிப்பையோ
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்!
காத்திருக்கும் அவதிகளை…
பயணிகளின் இருக்கைகளும்
பாடங்களை பள்ளிக்கூட
இருக்கைகளும் பதிந்திருக்கும்
மயானத்து இருக்கைகள்
பழைய கதைகளை சொல்லும்
வாசலோரத்து இருக்கைகள்
வந்துபோன கதையினை சொல்லும்.
அழுகையோ அவதியோ
பாடமோ பழையகதையோ
இவை அத்தனையும் பதித்து
காத்திருத்தல்களின் சாயல்களை
ரகசியமாக மறைத்திருக்கும்
பூங்காவின் தனித்த இருக்கைகள்
Category: | Leave a comment
19:52 | Author: சாகம்பரி

ஆரோக்கியமான உடல் சீரான சிந்தனை தெளிவான முடிவுகளை எடுக்க வைக்கும்… வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும்.

அதெப்படி?

நம்முடைய மூளையின் வேலை சிந்திப்பது மட்டுமல்ல, நமக்கு தேவையான விவரங்களை எடுத்து தருவதும் ஆகும். இது முன்பே பதியப்பட்டு இருக்கும். அனுபவ அறிவு அல்லது கற்ற அறிவு இந்த விவரங்களை மூளையின் நியூரான்களுக்கு தந்திருக்கும். அதை தேவையான  நேரத்தில் தேடித் தருவது முக்கியமல்லவா?

“அந்த சமயத்தில் பதட்டமாக இருந்ததா…  நினைவிற்கு வரவில்லை”
“என்ன செய்வது கோபமாக இருக்கும்போது மூளை வேலை செய்ய மாட்டேங்குதே”
“திங்க் பண்ண ஆரம்பித்தாலே தலைவலிக்க ஆரம்பித்து விடுகிறது”

இதுபோன்ற வார்த்தைகளை நீங்களும் பேசியிருப்பீர்கள் அல்லவா?
இப்போது அறிவியல்படி பார்த்தால் ஒரு சூழலில் நம்மை இயக்குவது மூளையாகும்… என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அது ஏற்கனவே பதிவிட்டிருக்கும் மெமரியிலிருந்து எடுத்து தருகிறது. அமைதியாகவோ பதட்டமாகவோ கோபமாகவோ எப்படி இருந்தாலும் நம்முடைய மூளை மேற்சொன்ன வேலையை செய்துதானே ஆக வேண்டும்… அது வெறும் அறிவியலுக்கு கட்டுப்பட்டிருந்தால்…! ஆனால் அப்படி நடப்பது இல்லையே….

எனவே அறிவியல் செயலாக்கத்திற்கும் மேல் நமக்கு ஒரு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அந்த ஒத்துழைப்பை தருவது மனம் என்று சொல்லாமா? அது சக்தி வாய்த்ததாக இருக்க வேண்டும் அல்லவா? மனம் அமைதியாக இருந்தால் எண்ணம் செயலாகும்…. செயல் கைகூடும். கொஞ்சம் குழம்பி போனாலும் தோல்விதான். சரிதானே!

மனோசக்தியை வைத்து ஆகாயத்தில் பறப்பது… ஒரு பொருளை கை கொள்வது.. விரும்பியதை அடைவது… ஆன்மாவுடன் பேசுவது… நீர் மேல் நடப்பது, ஒருவரை நம் விருப்பப்படி செயல்பட வைப்பது என்று பல அதிசயங்கள் நடத்த முடியும். அவ்வாறு செய்து காட்டியும் இருக்கிறார்கள்.
அதற்காக மனோசக்தியை பலப்படுத்தும் பல பயிற்சிகள்கூட வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மூச்சு பயிற்சி, மூலாதாரம் தொடங்கி சகஸ்ரதளம் வரையிலான சக்கரங்களை இயக்குவது… ஆராவை பலப்படுத்துவது,  மெடிடேசன் செய்வது… இன்னும் சில பயிற்சிகள் போன்றவையெல்லாம் இருக்கட்டும். இவை அனைத்துமே ப்ராண சக்தியை சேர்த்து  மனதின் சக்தியை அதிகரிக்கவே உள்ளன. இதையெல்லாம் செய்து அதிசய சக்திகளை பெறலாமே என்று ஒரு பக்கம் தோன்றினாலும்,  நம்முடைய வாழ்க்கைக்கு இவையெல்லாம் எந்த முறையில் பயன்படக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது.

இந்த மனோசக்தியை கை கொண்டால்…

நம்முடைய நித்திய வாழ்க்கையின் சிக்கல்கள் தீருமா?
குடும்பத்தின் தேவைகள் நிறைவேற்ற பொருளாதாரம் பற்றிய கவலை, உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, வியாபாரி என்றால் அன்றைய வியாபாரம் பற்றிய கவலை, உத்தியோகம் செய்பவர் என்றால் டார்கெட்.. அசெஸ்மெண்ட் கவலை என்று ஆயிரம் கவலைகள் உள்ளன.

காலையில் எழுந்து குளித்து கிளம்பி அலுவலகம் சென்று அல்லல்பட்டு வேலை முடித்து வீடு திரும்புவது… (அதற்குள் உசுருக்கு உத்தரவாதம் இல்லாத நகர வாழ்க்கை)- வரை மனதை குழப்பும்  நிகழ்வுகள் எத்தனை… எத்தனை…?

இதில் எப்படி ப்ராணாயாமம் செய்வது… அமைதியாக மெடிடேசன் செய்வது… மனோசக்தியை ஆக்டிவேட் செய்வது என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா? இன்றைய பரபரப்பான உலகத்தில் கோவிலுக்கு சென்று அமைதியாக இறைவனிடம் வேண்டுதல் வைக்கவே முடியவில்லை… மனம் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே?
அப்புறம் நமக்கு வேறு சிந்தனை வரும்… குடும்பம்… அதன் தேவைகள்… சம்பாதியத்திற்கான அலைச்சல்கள், இத்துடன் சிறிய 
பிரச்சினைக்கெல்லாம் திடுமென ஆரம்பிக்கும் குடும்ப சண்டைகள் போஸ்ட்கார்ட் அளவில் ஆரம்பித்து போஸ்டர் அளவிற்கு விரிவாகும் அபாயத்தை கொண்டுள்ள வாய் தகராறுகள்…

இதையெல்லாம் தீர்த்தால்தான் மனதை அமைதிபடுத்த முடியும்… மனோசக்தியை பெற முடியும் என்று முடித்து வைத்து… அதெல்லாம் சாமியாரானால்தான் வரும் என்று மனோசக்தி என்ற வார்த்தையையே மறந்து விடுவோம்.

ஆனால்  மனோசக்தி என்ற வார்த்தை நமக்கு புதிதல்ல… நம் முன்னோர்கள் (அப்பா… தாத்தா… கொள்ளு தாத்தா..) பயனடைந்த சக்திதான்.. அவர்கள் எல்லாம் துறவறம் அல்லது பயிற்சிகள் மேற்கொண்டுதான் இதை பயன்படுத்தினார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய தாத்தா ஒருவர் இருந்தார், வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே சொல்லி விடுவார். கனவில் வந்தது என்றும்… திடீரென மனதிற்கு பட்டது என்றும் சொல்லுவார். ஆனால் அது எங்களுடைய குடும்பம் சம்பந்தபட்ட குறிப்புகளாகத்தான் இருக்கும். வெளியாட்கள் தொடர்புடையது அல்ல. (அதையெல்லாம் சாமியாடிகள்தான் செய்வார்கள்)

அதேபோல குடும்பத்தினர் யாருக்காவது பிரச்சினை என்றால் உடனேயே கோவிலுக்கு செல்வது, சிறப்பு வேண்டுதல்கள் செய்வது, குலதெய்வ பூஜை செய்வது… வீட்டில் அன்னதானம் செய்வது… என்று பரிகாரங்களையும் சொல்லுவார். அந்த பிரச்சினை தீர்ந்து விடும் அல்லது தீர்ப்பதற்கான வழி கிடைத்து விடும்.

அவர் இருந்தவரை எங்களுக்கு பிரச்சினைகள் பற்றிய கவலையே இல்லை. அவற்றை தடுக்கும் சக்தியும் மீட்கும் சக்தியும் தாத்தாவிடம் இருந்ததே! அந்த நம்பிக்கைதான் எங்களுக்கும் பாதுகாப்பாக இருந்த்து. ஆனால் அவர் மூச்சு பயிற்சி செய்ததில்லை, தியானம் செய்ததில்லை, அமைதி அமைதி என்று தேடியதில்லை. பூஜையறையில்கூட சில நிமிடங்கள்தான் அமர்வார். வேண்டுகோள் நிறைவேறினால் தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு காவடி எடுப்பது போன்ற வேண்டுதல்களை செய்திருக்கிறார். எந்த கட்டாயமும் இல்லாத நாட்களில் இவற்றை செய்வாரா என்று கேட்டால், அதற்கான மனஉறுதி இல்லையேப்பா என்றுதான் சொல்லுவார்.  ஏன் இப்படி?


ரகசியம் என்னவெனில் மனோசக்தியை அவருக்கு எளிதாக கையாளத் தெரிந்திருந்தது. தேவையான சமயத்தில் அதை பிரயோகிக்கவும் அவருக்கு தெரிந்திருந்தது. இது போதுமே! மற்றவர்களுக்காக அருள்வாக்கு சொல்வது, அவர்களை வியக்க வைக்கும் அதிசயங்களை செய்வது போன்றவை புகழுக்காகத்தான்… அது நமக்குத் தேவையில்லையே…

நம் வாழ்க்கையை  நல்லபடியாக வாழத்தேவையான பலம் கிடைத்தால் போதுமல்லவா? அதைக் கொண்டு ரொம்பவும் எளிமையாக அமைதியான வாழ்க்கை வாழ முயற்சிக்கலாமே!
அமைதியான வாழ்க்கைக்கு என்ன தேவை? அமைதியை குலைப்பது எது? பணத்தேவை… அன்பிலாத சூழல்… தனித்த வாழ்க்கை… உடல் நலமின்மை.. தோல்வியின் பயம்… இவைதானே. இவற்றை மனோசக்தியால் சரி செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும்.   
மனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Category: | Leave a comment
20:28 | Author: சாகம்பரி



       பிராண சக்தி என்பது லைஃப் எனர்ஜி (உயிர் சக்தி) என்று சமஸ்கிருதத்தில் பொருள் வருகிறது. ஆக்ஸிஜன்தான் ப்ராண வாயு என்பதும் அதனால் உருவாக்கப்படும் சக்திதான் ப்ராணசக்தி என்றும் கொள்ள வேண்டும். உடலியலை பொறுத்தவரை செல்களின் வளர்ச்சிக்கு தேவையான உணவை தயாரிக்க குளுக்கோஸுடன் ஆக்ஸிஜனும் சேர்ந்து வேதிவினை புரிகிறது. அதில் எச்சமாக காரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்ஸைட் வெளிவருகிறது. ஆக்ஸிஜனை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுவது நுரையீரலில் வேலை. இதுவரை அறிவியல் விளக்கம் சரி. ஆனால் இந்த ப்ராண வாயு எப்படி மனோசக்திக்கு வலு சேர்க்கிறது?

       இதற்கு நமக்குள் இருக்கும் சக்தி உருவாக்கும் மையங்களை கவனிக்க வேண்டும். இதை விஷூவலாக அறிய முடியாது ஆனால் உணர முடியும்.
       ஒரு விசயம் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது… கோபம், துக்கம், மகிழ்ச்சி, வெறுப்பு, சாந்தம், பயம் என்று கவனப்படுத்தலாமா?. பேருந்து கூட்டத்தில் யாரோ ஒருவர் நம் காலை மிதித்து விடுகிறார். வலி….

அது உருவாக்கும் முதல் உணர்வு கோபம்தான்…
       “யார் என் காலை மிதித்தது?” என்று திரும்பி பார்க்கிறோம்… அந்த நபர் மன்னிப்பு கேட்கும் பாவனையில் நம்மை பார்த்தால் கோபம் குறைந்து விடுகிறது.   “கவனமாக நில்லுங்க” என்பதுடன் விசயம் முடிந்து விடும்.

 இது இரண்டாவது ரியாக்ஸன்…
        அவர் அலட்சியமாக பார்த்து, “கூட்ட நெரிசலில்   இப்படித்தான் நடக்கும்” என்றால்…  நமக்கு இன்னும் கொஞ்சம் கோபம் கூடும்.     இப்போது கண் சிவக்கவும் செய்யும்… வார்த்தைகள் துடித்து கொண்டு வெளிவரும்… பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதுதானே?

இதை மூன்றாவது கட்டம் என்று கொள்வோம்.  
       எதுவுமே  நடவாததுபோல  ஒரு ரியாக்ஸன் தருவோம்… சின்ன சிரிப்பு உதட்டில்  நிற்க பெருந்தன்மையான பாவனையுடன் நகர்ந்து விடுவோம்.  நமக்கு தெரிந்தவராக இருந்தால் இப்படி நடக்கும் அல்லது அந்த நபரிடம் நல்ல இமேஜை உருவாக்க நினைத்தால் இவ்வாறு செய்வோம்.

முதல் ரியாக்ஸன் உருவான இடம் மூளையாக இருக்கும்… அந்த வலியை உணர்ந்து கோபம் வருகிறதல்லவா அதற்கான நடவடிக்கைகளை ரத்த ஓட்டம் முகத்திற்கு ஏற்றி கோபம் வருகிறது. பிறகு எதிராளியின் பணிவை பார்க்கவும் அமைதியாகி விடுகிறோம். அத்தனையும் வாபஸ்! இங்கே உணர்வு மையம் மூளை! இதுவும் சக்தியை உருவாக்கும் இடம்தான்! வலிமையான சிந்தனைகளை உருவாக்கும்….  நம்மை பற்றிய பயோடேட்டா இங்கு இருக்கும். மன்னிப்பு கேட்டுட்டாரே விட்டுடலாமே என்ற ஆலோசனை தரும்.

இரண்டாவது ரியாக்ஸன் உருவாகும் இடம் வயிறு. டென்சன் அதிகரித்து அமிலத்தை சுரக்கச் செய்து வாடி வாசலில் இருந்து தலைதெறிக்க ஓடிவரும் காளையைபோல் கட்டுபாடிழக்க வைத்து பேச்சு சண்டையை ஆரம்பித்து வைக்கும். இதயத்துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவாக்கி… அதிக ஆக்ஸிஜனை உட்கொள்ள வைத்து… சண்டை முடிந்த பின் வயிறு எரியும். இதுவும் சக்தி உருவாகும் இடம்தான்.  நமக்கும் கொஞ்சம் விரையம்தான்!

மூன்றாவது ரியாக்ஸன் இதயத்தில் உருவாகும். உடனடி கோபத்தின் வேகத்தை குறைத்து முகத்தில் சிரிப்பை வரையும். இந்த இடத்தில் உள்ளுக்குள் அமைதி வந்துவிடும்.  நமக்கு தெரிந்தவர் என்ற எண்ணம் தோற்றுவிக்கும் அன்பின் வெளிப்பாடு!

இப்போது சொல்லுங்கள் நாம் சுவாசிக்கும் ப்ராண வாயு எப்போது ப்ராண சக்தியாக மாறுகிறது? என்று…. மூன்றாவது கட்டத்தில்தானே… ஏன் அங்கு உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன?. இந்த அமில சுரப்பு… டென்சன்… இதயதுடிப்பு அதிகரிப்பது எதுவுமே இல்லை. நமக்கு இதுதானே நல்லது.

சற்று யோசித்து பாருங்கள் ஒரு பயணத்தின் முடிவில் சகபயணியுடன் சண்டையிட்டு… வியர்த்து முகம் கறுத்து… தலைவலியுடன் பேருந்தில் இருந்து இறங்க வேண்டுமா? அல்லது அமைதியாக இறங்க வேண்டுமா? மனதை எளிமையாக்கிக் கொண்டால் இந்த கட்டுப்பாடும் எளிதாகி விடும். உண்மையில் அதுதான் நம் எண்ணங்கள் வெற்றியடைய செய்யும் சக்தி தருகிறது.

அமைதி மிக முக்கியம்… ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை ரகசியமாக வைத்திருக்கும் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை மனஅமைதியாகும். அப்போதுதான் சரியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியும்.

வெறும் சுவாசித்தலில் மட்டும் ப்ராணசக்தியில்லை என்பது உண்மைதானே. இந்த மூன்று சக்தி மையங்களும் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் விதத்தில்தான் அது சக்தியாக மாறுகிறது. சுத்தமான காற்று ப்ராணவாயுவை தரலாம்… ஆனால் அமைதியான மனோபாவம்தான் ப்ராண சக்தியாக அதனை மாற்றும். சுத்தமான காற்றை சுவாசித்தாலும் அருகிலிருப்பவருடன் ஆர்க்யூமெண்ட் செய்து கொண்டிருந்தால் அது எப்படி சக்தியாக மாறும்? அது வெறும் மூச்சு காற்றின் பயணமாக மட்டுமே இருக்கும்! சிந்தனை ஒன்றுபட்டு சுவாசிக்கும்போது மனோசக்தி அதிகரிக்கும்.

எப்படியெல்லாம் இதை செய்ய முடியும் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

🙇 இவ்வளவு  நீண்ட அப்சென்ஸ்க்கு மன்னிக்கவும்!  அடுத்த பகுதி 10-10-2018 அன்று வெளிவரும். நன்றி!
Category: | Leave a comment
18:38 | Author: sagampari
ஒரு நோயாளி வியாதியின் கொடுமையினால் அவதியுறுகிறான்....
நான் ஒரு மருத்துவர் எனில் அவனின் துன்பம் என்னை பாதிக்காது. மாறாக அதனை நீக்கும் வழிமுறைகளை சிந்திப்பேன். இது வெறும் எண்ணம் மட்டும்தான். இது மூளையின் செயலாக்கம்.

நான் அந்த நோயாளியின் அன்புமிக்க உறவினர் எனில் அந்த துன்பத்தையும் உணர்வேன். அது விரைவில் நீங்க வேண்டும் என்று நினைப்பேன். இது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அந்த சமயத்தை நினைவு கூருங்கள். உங்களுடைய எண்ணம் அல்லது வேண்டுதல் உங்கள் உள்ளிருந்து ( உணர முடியும். அதுதான் வலிமை மிக்க எண்ணம். இது கண்டிப்பாக வெற்றிபெறும். உள்ளிருந்து வருதல் என்பது பிராண சக்தியை சேர்ப்பது எனலாம். எண்ணங்களுடன் பிராண சக்தி சேரும்போது மனோசக்தி உருவாகிறது.

முன்பெல்லாம் பெரியவர்கள் சொல்வார்கள், ஒரு விசயத்தை எண்ணி பொறாமையுடன் பெருமூச்சு விடாதே என்பார்கள். ஏனெனில் அது செயல்த்துவம் உள்ள சக்தி. அழிக்கக்கூடிய தன்மை உடையது. பிராண சக்தி என்றால் என்ன? எப்படி எண்ணங்களுடன் பிராண சக்தியை சேர்ப்பது?

பிராண சக்தி நம்மை சுற்றியிருக்கிறது. பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதால் இது கிட்டும். இப்போது புரிந்திருக்குமே! . சரியான அளவில் உட்கிரகிக்கப்படும் பிராணவாயு தன்னுடைய அதீத சக்தியை பல்வேறு வடிவங்களில் உடலுக்குத் தருகிறது. இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் காந்த சக்தியை அதிகரிக்கிறது. சிலருக்கு மூளையின் செல்களைத் தூண்டிவிட்டு தெளிவான சிந்தனைகளை தருகிறது . சிலருக்கு இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு அதீத செயல்களை செய்யவைக்கிறது.

சில விசயங்களை நினைத்து பார்க்கலாமா?
1. தியானம் செய்யும்போது சுத்தமான இடம் இருக்க வேண்டும். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. இதெல்லாம் பிராண வாயுவின் இருப்பை உறுதிபடுத்தும் விசயங்கள்.

2. காலையில் மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது என்பார்கள். அப்போது கரியமில வாயு குறைவாக இருக்கும். அதிக அளவில் பிராணவாயுவை உட்கொள்ள முடியும்.

3. மனம் தெளிவடைய மலைக்குப் போ அல்லது கடற்கரைக்கு செல் என்பார்கள். இங்கெல்லாம் தூய்மையான காற்று பிராணவாயு செரிவுடன் இருக்கும்.

இவையெல்லாம் பிராண சக்தி பற்றிய ரகசியத்தை சொல்கின்றன அல்லாவா? இயற்கையிலிருந்து உருவான மனிதனுக்கு இயற்கை வழங்கும் அதீத ஆற்றல் இது. இது பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?
Category: | Leave a comment
20:39 | Author: சாகம்பரி
மனோ சக்தி...!.  இது ஐந்தாம் பரிமாணம் தொடரின் அடுத்த பகுதிதான். ஆழ்மனசக்தி எனப்படும் இதனை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைய பதிவுகள் உள்ளன.  அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியாத பல சம்பவங்களுக்கு பின்னணியாக இந்த மனோசக்தியை சொல்வதுண்டு. ஏனெனில் அறிவியல் என்பது ஐம்புலன்களால் உணரப்பட்டவற்றிற்கு மட்டுமே விளக்கம் தருகிறது. அனைத்திற்கும் விளக்கம் தரக்கூடிய அறிவியலை நாம் இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.

இயற்பியல் கோட்பாட்டின்படி ஆற்றலின் ஆதாரமாக ஒரு பருப்பொருள் (physical sysytem) அவசியம் தேவைப்படுகிறது. (energy is the ability a physical system has to do work on other physical systems). உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டை பார்க்கலாம். மட்டையின் மோதும் வேகத்தில்தான் பந்து செல்லும் தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. மட்டையும் பந்தும் மோதும் வேகம்தான் சக்தியின் அடிப்படை. கிரிக்கெட் மட்டைக்கு எப்படி சக்தி கிட்டுகிறது? அதனை வீசும் வீரனின் செயல்பாடுதான் மட்டைக்கு சக்தியை தருகிறது. வீரன்---> மட்டை, மட்டை-->பந்து என சக்தி மாற்றப்படுகிறது. இதனை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடிகிறது. எனவே பந்து செல்ல வேண்டிய இலக்கு, தொலைவு, மட்டையின் வேகம், அதற்காக செலுத்த வேண்டிய சக்தி என கணக்கிட்டு வேலை செய்ய முடிகிறது. போதுமான பயிற்சியையும் எடுக்க முடிகிறது. இது எதுவுமே இல்லாமல், எந்த இயற்பியல் விசையும் இன்றி வெறும் எண்ணங்களின் உதவியுடன் ஒரு பருப்பொருளை கையாள முடியுமா? வலிவு மிக்க எண்ணங்கள் ஒரு இயற்பியல் சக்தியாக மாறி செயல்படுகின்றன என்பதை நம்ப முடிகிறதா?  முடியும் என்பதே மனோசக்தியின் ரகசியம்.


மனோசக்தியின் உதவியுடன் நோய்களை குணப்படுத்துவது, ஒருவரின் மனதில் உள்ள விசயங்களை அறிவது, நம்முடைய எண்ணங்களை மானசீகமாக பரிமாறிக் கொள்வது, வேறு ஒரு இடத்தில் நடப்பதை உணர்ந்து சொல்வது, ஒரு பொருளை நகர்த்துவது போன்ற அதீத செயல்பாடுகளை பற்றி நிறைய செய்திகள் உள்ளன. நாம் எளிமையான சில விசயங்களை உணர முயற்சிக்கலாம்.

நிறைய சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருப்போம். ஒரு விசயத்தை நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்துவிடும். வெளியூரில் இருக்கும் மகனுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துவிடும்.

நல்லதோ... கெட்டதோ... எதையாவது நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்தேவிடும். நான் சொன்னதுபோலவே நடந்தது பார்த்தாயா என்று சொல்லிக் கொள்வோம். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அப்படி நடைபெறுவது இல்லை. ஏன்?

சிலருக்கு... சில நேரங்களில்... சில விசயங்களில்... மட்டும் மனோ சக்தி செயல்படுகிறது. எப்போதுமே என்ற உறுதித்தன்மை இல்லாததால்  கேள்விக்குறியாகிவிட்டது. ஏனெனில் அறிவியல் அடிப்படையில் சில நிகழ்வுகளை நிருபிக்க எப்போதும் ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மையாக இருக்க வேண்டும்.

ஏன் இந்த குளறுபடி? மனோசக்தியை கையாள எண்ணங்கள் வலிமையாக இருக்கவேண்டும். உ-ம், நமக்கு உடல் நலம் சரியாக வேண்டும் என்ற சிந்தனை மற்றவர்களுக்காக நினைப்பதைவிட வலிவு மிக்கதாக இருக்கும்.  உளவியல் ஒப்புக் கொள்ளும் ஒரு வார்த்தை mind power.  இதுதான் மனோசக்தி எனப்படுகிறது.  எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் இவற்றின் பிறப்பிடம் மூளை என்கிறது அறிவியல். சரி அது எப்போது வலிமை மிக்கதாக மாறும்? அத்துடன் ஆத்ம சக்தி எனப்படும் பிராண சக்தியும் சேரும்போதுதான். ஒரு உதாரணம் பார்ப்போமா? ப்ராண சக்தி பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்கிறேன்...


11:14 | Author: சாகம்பரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் கிட்டிய கடல்வாழ் உயிரினங்களின் படிமம்....
நாயினார் தீவில் கிட்டிய தமிழ் கலந்த நாகர் மொழியுருக்கள்.....
இன்னும் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்களை புரட்ட புரட்ட பல விசயங்கள் கிட்டுகின்றன. ஒரு பெரும் நிலப்பரப்பும்
தில் வாழ்ந்த மாந்தரில் பெரும்பான்மையானோரும் அழிக்கப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற மக்களின் மனக்கிலேசங்கள் செவிவழிச் செய்திகளாகவும் கதைசொல்லிகளின் மூலம் கதைகளாகவும் கிட்டுகின்றன. வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படும் கண்ணகியின் கதையும்,  'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர்  இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன. எழு கடல் என்றால் பொங்கியெழுந்த கடல் என்றும் எழுமலை என்றால் எரிமலையையும் குறிக்கிறது என்பது மெய்யா? எரிமலை சீற்றம் கண்ட கடல் கொண்ட என் நாடு எங்கேயோ இருக்கிறது என்பதை குறித்த வாக்கியம் என்பதும் பொருந்தி வருகிறதே. தொல்லியல்,மரபியல்,கடலியல் சார்ந்த ஆய்வுகள் நடத்திதான் உண்மையை வெளிக்கொணர முடியும். அதுவரை நம் தொலைந்து போன பெருமைகளை மறந்து இருக்க வேண்டும். 

இப்போது நாம் இந்த தொடரின் தலைப்பிற்கு வந்தாக வேண்டும்.....

மனோ சக்தி பற்றி அறியும் முன், மனம் என்பதன் விளக்கம் வேண்டும். சூட்சும உடல்... ஸ்தூல உடல்....  ரொம்பவும் ஆன்மீக விளக்கமாக போய்விடும் என்பதால் இந்த இடத்திற்கு ஒப்புதலாக உயிர் எனப்படும் ஆன்மாவையே மனம் என்று கொள்கிறேன். உடல், உயிர் இரண்டும் சேர்ந்ததுதான் நாம். இவை இரண்டையும் இணைக்கின்ற வித்தை நம்மிடம் இல்லை -அதாவது சாதாரண மனிதர்களிடம் இல்லை. உடலுக்கு காலத்தின் கட்டுப்பாடு உண்டு. உயிருக்கு கிடையாது. உடலுக்கு சக்தி குறைவு, வேகமும் குறைவு ஆனால் உயிருக்கு சக்தியும் வேகமும் அதிகம். எனவே உடலில் இருந்து உயிர் விலகியும் சேர்ந்தும் இருக்கும் வித்தை தெரிந்து கொண்டால் நான் சித்தனாகிவிடுவேன் - அதாவது நான்காவது பரிமாணத்தை கடந்துவிடுவேன். எங்கெல்லாம் நான்காவது பரிமாணத்தின் கட்டுப்பாடு இல்லையோ அங்கெல்லாம் நரை,திரை,மூப்பு,பிறப்பு,இறப்பு கிடையாது. உடலில் இருந்து விடுபட்டுவிடுவதால் ஐந்தாம் பரிமாணத்தில் செயலாற்ற முடியும் - மனோவேகம், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பிரசன்னமாகலாம்.

( மரணத்திற்குப் பின் மனிதர்கள் அதிவேகமாக இருக்கும் வேறு பரிமாணத்தை அடைந்துவிடுவதாகவும் அவர்கள் நம்முடனும் இருக்கிறார்கள் என்றும் சித்தர் பாடல் ஒன்று கூறுகிறது.  கரியபவளம் என்ற மூலிகையை விளக்கெண்ணெயில் குழைத்து புருவத்தில் தடவிக் கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் மற்றோரு பரிமாணமும் அங்கே இருப்பவர்களும் தெரிவார்கள் என்றும் அந்த பாடல் மேலும் கூறுகிறது. பரிட்சித்து பார்க்கும் மனதைரியம் எனக்கில்லை. யாராவது முயற்சித்தால் சொல்லுங்கள்.)

இதெல்லாம் ஆன்மீகக் கட்டுக்கதைகள் என்று தோன்றுகிறதல்லாவா? நான் முதலிலேயே குறிப்பிட்ட worm hole theory இன்ன பிற வார்த்தைகளில்... இதனைத்தான் சொல்கிறது -. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே புழுத்துளைகள் எனப்படும் மர்மமான துளைகள் உள்ளன. அவற்றின் வழியே பயணிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் அதி தொலைவில் உள்ள இடத்தைக்கூட நொடிகளில் அடையமுடியும். அப்படித்தான் பிரசித்தி பெற்ற 'வாவ்' சிக்னலும் 72நொடிகள் மட்டும் கிட்டியது என்று ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். இதனை நிருபிப்பதற்காக வார்ம்ஹோல்களை தேடிவருகின்றனர். பிரச்சினை என்னவென்றால் வாவ் சிக்னலை எழுப்பிவிட்டு நொடிகளில் மறைந்துபோன அந்த 'யாரோ' ஒருவருக்கு வார்ம் ஹோலில் பயணம் செய்வதற்கான நுட்பங்களும், அதிவிரைவு பயணத்தை எதிர்கொள்வதற்கான தகுதிகளும், சக்தியும் இருந்தன, அது நம்மிடம் இல்லை. .... அப்படியென்று சொல்லுகிறார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி....  இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் நம் விருப்பத்திற்கே இருக்கட்டும். அறிவியல் தேடலாகவோ இல்லை ஆன்மீகத் தேடலாகவோ இருக்கட்டும்.

என்னுடைய பதிவும் வான்வெளி சஞ்சாரத்தில் நீண்ட நாட்கள் டிஜிட்டல் அலைகளாக பயணிக்க வாய்ப்பு இருப்பதால்...எதிர்காலத் தேவை கருதி இன்னும் சற்று கூடுதலாக பதிவிடுகிறேன். இதற்கு அறிவியல் விளக்கமெல்லாம் தற்சமயம் இல்லை. அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம்.

அடுத்த பகுதியில் ஏழாம் அறிவான மரபியல் நினைவுகளும், ஐந்தாம் அறிவான மனோசக்தியும் பற்றிய சில விசயங்களை -(பழங்கதைகள்) பேசலாம்.



முந்தைய பதிவுகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html
5ம் பாகம்:   பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
6ம் பாகம்    
பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
7ம் பாகம்     பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.

22:09 | Author: சாகம்பரி
Thanks to wiki resource- Kumari continent
தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?

அதாவது செப்பு காலம், வெண்கல காலம் ஆகியவற்றிற்கான தொல்லியல் சான்றுகள் தமிழ் மண்ணில் கிட்டவில்லை. இலக்கியத்திலிருந்த ஒரு விடை கிட்டுகிறது. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குமரி கண்டம் என்பதுதான் அது. அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்ததாக தெரியவில்லை. இலக்கியங்கள் அதனை அழகான விவரித்திருந்தன. அது ஏழு பனை நாடுகள் கொண்டது. அங்கு வசித்தவர் குமரி மாந்தர். இரண்டு பெரிய மலைத்தொடர்களுக்கு இடையே உருவாகியயிருந்த பரந்த நிலப்பரப்பு. குமரி கண்டத்தின் மக்கள் நாகரிகமாக இருப்பிடங்கள் உருவாக்கி வாழ்ந்திருந்தனர். முதலிரண்டு கடற்கோள்கள் நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றை உருவாக்கி குமரி கண்டத்தை கடலுக்கடியில் கொண்டு சென்றது என்று கூறப்படுகிறது. இதற்கான புவியியல் ஆதாரம் : http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது.

குமரி கண்டம் எனப்படும் பரந்த நிலப்பகுதி தற்போதைய குமரி முனையுடன் இருந்தது என்று கூறப்படுகிறது. இது பற்றி தமிழறிஞர் தேவ நேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்து பரவியிருந்தது. அந்த சமயத்தில் இலங்கை இதனுள்தான் இருந்தது.

மிகப்பெரிய அளவில் நான்கு கடற்கோள்கள்  ஏற்பட்டன. அவைதான் குமரி கண்டத்தின் அழிவிற்கு காரணமானவை என்றும் கூறப்படுகிறது. 2,00,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த குமரி கண்டத்தின் அழிவு 50,000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடைசியாக ஏற்பட்ட கடற்கோள்தான் காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரை கடல் கொண்டதாக கூறப்படுகிறது. இது 17,000 வருடங்களுக்கு முன் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. 1980ல் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள் தற்போதைய காவிரிபூம்பட்டினத்தின் கடற்பகுதியில் 75 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சமயத்தில், பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடித்தது. கடற்கோள் ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த நிலப்பரப்பான குமரி கண்டம் கடலுக்கடியில் சென்றது. ஏராளமானோர் மாண்டனர். இவை வரலாற்று குறிப்புகள். இந்த காலகட்டத்தில் மானசீகமாக பயணித்தால் சில கேள்விகள் எழுகின்றன.

அதிரம்பாக்கம் தொல்லியல் சொல்வது, 15,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுக்களாக வாழும் நாகரிகமான காலகட்டத்தில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். உலகம் முழுவதும் சரியான தட்பவெப்பம் நிலவாத அந்த காலகட்டத்தில் இங்கே குளிர்ச்சியான பசுமையான தட்பவெப்பம் நிலவியதை உணர முடிகிறது. அதற்கான விலங்கியல் படிமங்கள் கிட்டியுள்ளன. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறான்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில்  தொல்லியல் சான்றுகளாக கிட்டியவை 50,000 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன. கல்லை பயன்படுத்
தி ஏர்கலப்பை, போர் ஆயுதங்கள், போன்றவையும் இரும்புகாலத்தின் சான்றாக செங்கற்களால் கட்டப்பட்ட இரும்பு உருக்கும் தொழிற்கூடங்களும் கண்டுபிடிக்கப்படுள்ளன. (இங்கேயும் 50,000 ஆண்டுகள் பழமையான் கற்கால சான்றுகளுக்குப் பிறகு 3000 ஆண்டுகள் பழமையான இரும்புகாலத்திற்கான சான்றுகள் கிட்டுகின்றன.
     
Indus-valley civilization

17,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணை, பூகம்பம், எரிமலை, கடற்கோள்கள் என்று இயற்கையின் அழிவு சக்திகள் புரட்டி போட்டிருக்கின்றன. இது போன்ற இயற்கை அழிவுகளை விலங்குகள் முன்கூட்டியே கண்டுகொள்ளத்தக்கவை. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கும் இந்த சக்தி இருந்திருக்கும் அல்லவா? அப்படியெனில் அழிவு வரப்ப்போவதை உணர்ந்து புலம் பெயர்ந்திருக்கலாமே. சரி அப்படி புலம் பெயர்ந்தால் அவன்னுடைய பாதையை எது வரையறுத்து இருக்கும். இயற்கை வரையறுத்த எல்லைகள்தான் அவர்களுடைய பயணப்பாதையாக இருக்கும். அந்த பயணப்பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக சென்றது எனில், அதன் முடிவு சிந்து சமவெளியை அடைகிறது. சிந்து நதியின் கரையோரத்தில் இருக்கும் சமவெளி இது இன்றைய ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது.
      

இந்த கூற்றுக்கு ஆதாரமாக சொல்லப்படுபவை, அங்கு கிட்டிய பசுபதி, ஒற்றை கொம்புடைய நீர்யானையின் வடிவங்களும். இதனை யூனிகார்ன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிரம்பாக்கம் தொல்லியல் பகுதியில் நீர்யானையின் படிமம் கிட்டியுள்ளது.   ஈரமான நிலப்பகுதியில் மட்டுமே நீர் யானை வசிக்கும். காப்புரிமை சம்பந்தபட்டதால் இங்கே அந்த படத்தை பிரசுரிக்க முடியவில்லை. வாலை பார்க்கும்போது அது குதிரை இல்லை என்று தெரியும்.


சில இடங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாக காவ்ரி,பெருனை போன்ற வார்த்தைகள் பிராமி எழுத்து வடிவில் கிட்டியுள்ளன. மீண்டும் தெற்குப்பக்கம் குடியேற்றம் கிமு.3000லிருந்து -இரும்புகாலத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கலாம் என்று கொள்ளப்படுகிறது. தொல்லியல் ஆராய்ச்சி மட்டுமல்லாமல் கடலியல் ஆய்வுகளும் மேற்கொண்டால்தான் இயற்கை அழித்த தமிழ் வரலாறு தெரியவரும்.

அடுத்த பதிவில் மனோசக்திக்கான சான்றுகள் - அழிந்து போன வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை செவி வழி கதைகளாகவும், இலக்கியவழிசெய்திகளாகவும் உறுதிபடுத்தலாமா?.

இவற்றை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm
http://balubpos.blogspot.com
http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

    ca. 200,000 to 50,000 BC: evolution of "the Tamilian or Homo Dravida",
    ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
    50,000 BC: Kumari Kandam civilisation
    20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
    16,000 BC: Lemuria submerged
    6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
    3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
    1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
    7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar) 
22:02 | Author: சாகம்பரி
இந்த பதிவு பழந்தமிழர் அறிந்திருந்த சிறப்புமிக்க ஐந்தாம் பரிமாணம் என்னும் மனோசக்தி பற்றியது.

பழந்தமிழரின் வரலாறு தேடி காலப்பயணம்.
முதலில் சில விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழன் என்பது தமிழ்மொழி பேசும் இனம். இதனை குலத்தின் பெயரோடோ, மதத்தின் பெயரோடோ தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளானதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலக்கியத்திலிருந்து - தொல்காப்பியம் -கிமு700-கி.மு300
பழந்தமிழர் வரலாறு என்ற தேடலுக்கு நிறைய விசயங்கள் கிட்டுவது இலக்கியங்களில் இருந்துதான்.  அவை தமிழரின்ன் தோற்றம் பற்றி சுட்டுவது கிமு. 700லிருந்துதான். தலைச்சங்கம் வைத்து பதியப்பட்ட நூல்களுள் முதன்மையானது 'அகத்தியம்' என்ற இலக்கண நூல். அதனுடைய காலம் 'தொல்காப்பியத்திற்கும்' முன் என்று அனுமானிக்க முடிகிறது. ஏனெனில் தலைச்சங்கத்தில் இடம்பெற்றிருந்த புலவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவருடைய சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர் விளங்கினார் அன்று கூறப்படுகிறது. இதனைக் கொண்டு தொல்காப்பியத்தின் காலம் கிமு700-கிமு300 வரை இருக்கலாம் என்று பதியப்படுகிறது. தொல்காப்பியம் என்பது இலக்கண நூல். தமிழ் மொழியின்  இலக்கணம் பற்றிய வரையறகள் இதில் இருக்கின்றன.

நம்முடைய தேடல் தமிழரின் தோற்றம் பற்றியது. முதல் இலக்கிய நூல் சொல்வதோ பண்பட்ட முதிர்ந்த மொழியின் லட்சணங்களை. இன்னும் தேடலை பின் நோக்கி நகர்த்த முடிவு செய்தேன். தொல்பொருள் துறையின் பதிவுகளில் கிட்டியது ஆதிச்ச நல்லூர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி படுகையில் உள்ளது.

ஆதிச்ச நல்லூர் - கிமு.1000
அதற்கும் முன்பு வரலாற்று ஆதாரமாக ஆதிச்ச நல்லூரில் கிடைத்த புதைபொருட்களை சொல்லலாம். முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்பாண்டங்கள், சில உலோக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிமு1800ஐ சேர்ந்தது என்கிறார்கள் இவை கி.மு 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தபட்டன. இதற்கான சுட்டி: http://asi.nic.in/asi_exec_adichchanallur.asp 

இந்த இடத்தில் மேலும் ஒரு குறிப்பு கிட்டுகிறது. வேதிய முறைப்படி செய்பவர் அல்லாதவர் என்று இரு பிரிவினர் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வேதகாலம் என்பது கிமு.2000-500 வரை.

செம்பியன் கண்டியூர் -கிமு.2000-கிமு.1000
மயிலாடுதுறையில் செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் 2006ல் நடைபெற்ற ஆய்வுகள் அங்கு கிட்டிய பொருட்கள் கற்கோடாரிகள் கற்காலத்தின் பிற்பகுதியை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தப்படன. தொன்மை கிமு 2000-1000.  
சிந்து சமவெளி நாகரிகத்தின் (கிமு.3300-1300)தொடர்புடைய எழுத்துருக்கள் கிடைத்தன.

மரபியல் ஆதாரம் - 50,000-70,000 வருடங்கள்
தற்கால மனிதன் ஹோமோ சாபியன் இனத்தை சேர்ந்தவன் என்றும் அதற்கு முன்பாக நியாண்டர்தால் இன மனிதன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நமக்கு மூதாதையர் ஹோமோ சாப்பியனிலிருந்து கணக்கிடப்படுகின்றனர்.  இந்த மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. காலம் 50,000-70,000 முன்பு. இந்த மரபணு மாதிரி மதுரை பக்கத்திலிருக்கும் கிராமத்திலிருக்கும் ஒரு மனிதரின் மரபணு உடன் பொருந்தியது. எனவே ஆசியாவில் மனிதர்கள் குடியேற்றம் 70,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 40,000 வருடங்களுக்கு முன் நிகழந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.

அதிரம்பாக்கம் -15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.
திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அதிரம்பாக்கம் தொல்லியல் ஆய்வில் கிட்டியது ஆச்சரியப்படுத்தியது. 15,00,000 ஆண்டுகளுக்கு முன் பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிட்டின. ஆப்பிரிக்காவில் கிட்டிய மாதிரியுடன் ஒத்திருந்தன. இதற்கு முன் தெற்காசியாவில் பழைய கற்காலம் ஆரம்பித்ததே 70,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று ஒரு கருத்து இருந்ததை பொய்யாக்கியது இந்த ஆய்வு.
இதற்கான சுட்டி
http://asi.nic.in/asi_exca_imp_tamilnadu.asp
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece

அங்கே அருகிலேயே அல்லிகுழி மலைத்தொடரில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்த குகைகள் இருக்கின்றன. அவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இத்தனை தகவல்களும் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகின்றன. முதல் மனிதனின் தோற்றம் தமிழகத்தில் இருந்தது என்பதுதா
ன் அது. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே குழுக்களாக மக்கள் வாழ்ந்துள்ள ஒரு நாகரிகமான சமுதாயம் இங்கிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் கற்காலத்திற்கான ஆதாரங்களுக்குப்பின் கிட்டியவை  இரும்பு காலத்திற்கு சென்றுவிடுகின்றன.

கற்காலம் ,செப்புகாலம்,வெண்கல காலம், இரும்பு காலம் என்று பிரிக்கப்பட்ட கால கட்டங்களில் பயணித்த மனித நாகரிகத்தில், தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?


18:12 | Author: சாகம்பரி
சென்ற பகுதியின் தொடர்ச்சி.....
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா? 
 
இதற்கு நமக்கு ஏதோ ஒரு இறை சக்தி உதவுவதாக எண்ணுவோம். நல்லது நடந்தால் சரி... வேறு மாதிரி நடந்தால்...

அவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள். புது இரு சக்கர வாகனம் வாங்கியாகிவிட்டது. கல்லூரியில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி. அதீத உற்சாகம் கரைபுரண்டு ஓட, நான்கு வழிச்சாலையில் மிகுந்த வேகத்துடன் வண்டியில் சென்றனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  ஒரு கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் மோதிவிட்டான். வழக்கமாக இது போன்ற விபத்துக்களில் பின் இருக்கையில் அமர்ந்தவன்தான் மாட்டுவான். வண்டியை ஓட்டுபவன் பெரும்பாலும் தப்பிவிடுவான். ஆனால் இந்த விபத்தில் ஓட்டியவன் உயிரை விட்டான். பின் இருக்கையில் அமர்ந்தவன் மருத்துவ உதவியினால் பிழைத்துவிட்டான்.. தப்பித்தவனிடம் விசாரித்தபோது,  அவன் சொன்னது என்னவெனில், மோதப்போகும் கடைசி  நொடியில் கூட விபத்து தவிர்க்கப்படும் என்று நினைக்க, ஓட்டியவனோ  மோதியே விட்டான். மோதும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை "சாரிடா...". மன்னிப்பு கேட்க தோன்றிய மனதில் மாற்றுவழி யோசிக்கத் தோன்றவில்லையே. இதுதான் 'விதி' என்றனர். போதாத 'காலம்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஏதோ ஒன்று அவனை அந்த நிகழ்விற்குள் கொண்டு சென்றதல்லவா... அதுதான் அவனுக்கு வழிகாட்டியது. அதைத்தான் வானுரைபதிவு (ஆகாஷிக் ரெக்கார்டுகள்) என்கிறார்கள். அந்த நேரம், அந்த இடம், அந்த வண்டி, ஓட்டியவன் அனைத்தும் சேர்ந்த ஒரு நிகழ்விற்கான ஒரு காட்சிக்கான அமைப்பு அந்த இடத்தில் அலைகளாக இருந்திருக்கிறது. அந்த சூழ்நிலைக்குள் செல்லவுமே நம்மை பாதிக்க, அதனை செயல்படுத்தும் பாத்திரங்களாக மாறிவிடுகிறோம். இதைத்தான் முதல் பகுதியிலேயே நான்காவது பரிமாணத்தின் திட்டத்தில்தான் உலகின் ஒவ்வொரு அசைவும் நடக்கின்றன என்றேன்.

இன்னும் ஒரு விளக்கம் தருகிறேன். சுவாமி விவேகானந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்திய ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. விவேகானந்தரின் உரை

மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். விவேகானந்தர் சந்தித்த அந்த மனிதர் ஒரு சாது. அவர் மூன்று தாள்களில் எதையோ எழுதி மடித்து வைத்துக் கொண்டார். விவேகானந்தரும் அவருடைய நண்பர்கள் இருவரிடமும் அவற்றை நீட்டி 'பிரித்துப் படிக்க வேண்டாம். அப்படியே சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். சற்று பொறுத்து "நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் எந்த மொழியில் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்." என்றாராம். தனியே சென்று விவாதி
த்துவிட்டு, விவேகானந்தர் சமஸ்கிருதத்திலும், அவர் நண்பர்கள் அராபியிலும், ஜெர்மானிய மொழியிலும் நினைத்துக் கொண்டனர். இவை அந்த சாதுவிற்கு தெரியாத மொழிகள். உற்சாகமாக சாதுவிடம் திரும்பி வர 'உங்களிடம் நான் ஏற்கனவே தந்த தாள்களை எடுத்துப் பாருங்கள்' என்றார். அந்தத்தாள்களில் இவர்கள் மூவரும் நினைத்த வாக்கியங்கள் அந்தந்த மொழியிலேயே இருந்தன. கூடவே யார் எந்த வாக்கியத்தை நினைப்பார்கள் என்றும் மிக்ச்சரியாகவே எழுதியிருந்தார். இதற்கு அவர் தந்த விளக்கம் வானுரை பதிவுகள்தான். இதைத்தான் இவன் இப்போது செய்வான் என்பதை வானுரை பதிவுகளின் மூலம் அவரால் அறிய முடிந்தது.

சாதாரண நிலையிலிருந்து பார்க்கும்போது திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருக்கிறோம் என்பது புரிகிறதல்லாவா? மேலும் அண்டவெளி சுருங்கும் சமயத்தில் பொருட்கள் வாயு மூலக்கூறுகளாக மாறிய பின்பும் அழியாத அலைவடிவாக இந்த  வானுரை பதிவுகள் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டேதான் இருக்கும். புதிதாக பிறக்கும் அண்டவெளிக்கு வழிகாட்டியாகும் வாய்ப்பிற்காக காத்திருக்கும் என்பதும் ஒப்புக் கொள்ள முடிகிறதுதானே. 

எத்தனை ராமரோ? எத்தனை கணையாழியோ? என்று அகத்தியர் அனுமனிடம் சொன்னதன் விளக்கமும் இதுதான். எல்லாமே மீண்டும் மீண்டும் நடக்கின்றன. ஓரளவிற்கு விளக்கிவிட்ட நம்பிக்கையில் , இப்போது ஏற்கனவே பதிவிட்ட இந்த வாக்கியங்களை அழுத்தமாக மீண்டும் பதிகிறேன்.

 "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."

இதுவரை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது ஒரு கேள்வி எழும். இவ்வாறு காலத்தால் கட்டப்பட்ட நிகழ்வுகளை  முன்கூட்டியே அறிய முடியுமா?  அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.





இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும் இதுதான் விடை. நம்மாலும் அந்த வானுரை பதிவுகளை வாசிக்க இயலும்.

இது பற்றி இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற 'வாவ்' சிக்னல் பற்றிய ஆராய்ச்சிதான் அது.

ஜெர்ரி என்ற விஞ்ஞானி 1977ல் அவருடைய தொலை நோக்கி பதிந்திருந்த விண்வெளி பதிவுகளை ஆராய்ந்த போது ஒரு ஆச்சரியமான அலைவரிசை கிட்டியது. அது நம்முடைய தனுர் மண்டலம் என்றழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தில் இருந்து - 200 ஒளியாண்டுகள் - தொலைவில் இருந்து வந்திருந்தது. அதனை மொழிபெயர்த்தபோது கிட்டிய விடை 'வாவ் (WOW)'. பூமியை பார்த்து வெளியுலகத்தில் இருந்து வர்ணிக்கப்பட்ட இந்த சிக்னலை யார் அனுப்பியிருக்க முடியும்.
இதற்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Wow!_signal
Thanks to wiki resource


நம்முடைய விஞ்ஞானிகளுக்கு சிக்கல் என்னவென்றால் அதற்கு பதில் அனுப்பினால், அது அனுப்பப்பட்ட இடத்தை அடைய  200 வருடங்கள் ஆகும். அதற்குள் அனுப்பியவர் உயிருடன் இருப்பா
ர் என்று சொல்ல முடியாது. அது பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொலைவிலிருந்து வந்திருந்தால் அந்த அலை வீச்சு அருகிலிருக்கும் அலைவாங்கியிலும் பதிவாகியிருக்கும். ஆனால் இந்த சிக்னல் மீண்டும் அடுத்த ஒலிவாங்கியில் பதியப்படவேயில்லை. அப்படியென்றால் யாரோ அருகே வந்து சொல்லிவிட்டு சென்றதுபோல இருக்கிறது. காலம் சம்பந்தப்பட்ட கணக்கீடுகளால் இதனை விளக்கமுடியவில்லை. இந்த விசயத்தில் நம்முடைய நான்காம் பரிமாணம் பயன்படாமல் போய்விட்டது. இதனை விளக்கும் பொருட்டு இயற்பியல் புது வார்த்தையை கொண்டு வந்தது. Worm hole(புழுத்துளை என்றால் நல்ல வார்த்தையாகப்படவில்லை). காலத்திற்கு கட்டுப்படாத ஒரு குறுக்கு வழிப்பயணம் இதில் சாத்தியம். 
இதற்கான சுட்டி:http://en.wikipedia.org/wiki/Wormhole


சரி சரி, எளிதாகவே சொல்லகிறேன். வாயு வேகம் மனோ வேகம் என்று படித்திருப்பீர்களே. இதில் மனோவேகத்தைதான் இயற்பியல் தத்தெடுக்கிறது. ஐன்ஸ்டைனின் சில கோட்பாடுகளை கொண்டு இதனை விளக்கவும் முற்படுகின்றனர். இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சரி, நம் பக்கம் ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்ப்போமா?

பழந்தமிழரின் வாழ்க்கையில் நான்காவது பரிமாணம் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் ஐந்தாவது பரிமாணம் சம்பந்தப்பட்ட கலைகளில் நம் முன்னோர்கள்  மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பழந்தமிழர் என்றால் 50,000 வருடங்களுக்கு முந்தைய குமரி மாந்தன் எனப்படும் மூத்த தமிழ்குடியின் வரலாறு பற்றி அடுத்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். 



முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html

16:46 | Author: சாகம்பரி

அலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.

இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.

நம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.
      
  
இந்த படத்தில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் நம்முடைய புலனால் உணரக்கூடியது. இரண்டாவது தெளிவாக உணரமுடியாது. மூன்றாவது நம்மால் உணரவே முடியாத அளவிற்கு இருக்கிறது. சக்தி குறைந்து கொண்டே போகிறதே தவிர முற்றிலுமாக இல்லையென்று சொல்லமுடியாது(not nullified). சரியான சாதனங்களை பயன்படுத்து பெரிதுபடுத்தி மீண்டும் உணர முடியும். 

உதாரணமாக, நம் அருகில் இருப்பவர் பேசுவது தெளிவாக கேட்கும். அவர் சற்று தொலைவு சென்றவுடன் கேட்பது படிப்படியாக குறைகிறது. இன்னும் அவர் நகரும் போது சுத்தமாக எதுவும் கேட்காது. ஏனெனில் அலையின் அளவு குறைகிறது. சரியான சாதனங்கள் உதவியுடன் கேட்க முடியும்.  இன்னும் விலகிச் செல்லும்போது நம்முடைய சாதனங்கள் உதவி செய்யாது. அதனால் அதனை உணர முடியாமல் போகிறது. ஆனால், அவை வலு குறைந்த அலைகளாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. 

ஒரு தகவல் சொல்கிறேன். பென்சியாஸ்  மற்றும் வில்சன் (Penzias and Wilson) என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.  பெல் ஆய்வக விஞ்ஞானிகளான அவர்கள் CMB எனப்படும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட 'அண்டவியல் நுண்ணலை பின்புல கதிர்வீச்சு' ஆராய்ச்சிக்காக அந்த பரிசை வென்றனர். 1964ல் அண்டவெளியில் பரவியிருக்கும் நுண்ணலைகளை பதிவு செய்து கொன்டிருந்த போது, ஒரு புதிய பதிவொன்று கிட்டியது. மிக அதிக வெப்பவீச்சை பதிவு செய்திருந்த அந்த காஸ்மிக் கதிர்களின் மூலதாரம் நம்முடைய பால்வெளிக்கு வெளியில் இருந்து வந்தது என்று தெரிந்தது. சிலபல அறிவியல் தேடல்களுக்குப் பிறகு அந்த அலைவீச்சானது நெபுலா வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு (வெடிப்பு தொடங்கிய 3,00,000 வருடங்களுக்குள்) என்று உறுதிபடுத்தினர். அதுவரை (1970வரை) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எழுந்த வேறுபட்ட கருத்துக்களை பொய்யாக்கி வெடிப்பின் மூலமே உருவானது என்ற கருத்தை உறுதிபடுத்திய இந்த ஆய்விற்கு நோபல் பரிசு கிட்டியது. 
இதுதான் அவர்கள் உபயோகித்த தொலைநோக்கி.
      

குறிப்பிட்ட அந்த கதிர்வீச்சின் ஒலிவடிவ பதிவு இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் கேட்டுபாருங்கள். மிக அதிகபட்ச அதிர்வெண்களில் பதிவாகியுள்ள அந்த ஒலிப்பதிவை கேட்டு காது வலியெடுத்தால் நான் பொறுப்பல்ல.(எனக்கு இரண்டு நாட்கள் வலியிருந்தது)

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் உருவாக்கப்பட்ட  அலைவீச்சு அல்லது கதிர்வீச்சு அழிவடைவதில்லை. அவை பிரபஞ்சத்திலேயே சுற்றி வருகின்றன. இதே போல்தான் ஒரு நிகழ்வு நடக்கும்போது உருவாகும் ஒளி, ஒலி செய்திகள் அலைகளாக நம்மை சுற்றி பரவிக் கிடக்கின்றன. இவற்றை 'ஆகாஷிக் ரெக்கார்டுகள்'  என மெட்டாபிஸிக்ஸ் (புலன் தாண்டிய நுண்ணியல்) ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நம் எண்ணங்கள்கூட கதிர்வீச்சுகளாக பரவுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வானுரை பதிவுகள் நம்மை பாதிக்குமா? கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா? அதேபோல, மிகவும் மெல்லிய வீச்சுகளாக தேய்வுற்று கிடக்கும் நமக்குத் தொடர்பு உடைய அலைகளுக்கு சரியான உள்வாங்கியாக(reciever) நாம் விளங்கமுடியும். அதற்கான ஆய்வுச்செய்திகளுக்கு போவதற்கு முன் சில விசயங்களை நாமே உணர முயற்சிக்கலாமா?

இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா? 
 
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
 
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
 
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
 
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
 
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா?
18:34 | Author: சாகம்பரி
இந்த கட்டுரையின் முதல் இரண்டு தொடர்புகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html

 


முதலிரண்டு பகுதிகளுக்கே சில கேள்விகள் வந்துவிட்டன. அவற்றை விளக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாது போலிருக்கிறது.


1. ஐன்ஸ்டை
ன் சமன்பாடு, '=' குறி, அணுசக்தி ஆகியவற்றை பற்றி எளிய விளக்கம் .
'=' குறிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று தோன்றுகிறதல்லவா? ஒரு செய்தியை சமன்பாடாக சொல்லிப்பார்ப்போம்.

தன்னம்பிக்கை+உழைப்பு --> உயர்வு
    இதன் விளக்கம் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரமுடியும்.

தன்னம்பிக்கை+உழைப்பு
= உயர்வு
   இதன் விளக்கம் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையும் உழைப்பும் இருக்கிறதோ அந்த அளவிற்கு உயர்வு கிட்டும் என்பதும்,

   உயர்வு=தன்னம்பிக்கை+உழைப்பு என்றும் கொள்ளலாம்.
   இதன் விளக்கம் உயர்வு இல்லையெனில் தன்னம்பிக்கையோ அல்லது உழைப்போ இல்லையென்றும் கொள்ளலாம். இரண்டு பக்கமும் சமமாகும் இந்த
= குறிதான் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை முக்கியத்துவம் பெற்றதாக்கியது.

ஐன்ஸ்டைனின் சமன்பாடு:
 
    
   E - எனப்படுவது ஆற்றல், சக்தி
   M  - ஒரு பொருளின் எடை. இத்துடன் C (ஒளியின் வேகம்)ஐ சேர்க்கும் போது ஆற்றலின் அளவு தெரிய வருகிறது.

இரண்டு விசயம் புரிந்து கொள்வோம்.
1. ஒரு பொருள் ஆற்றலாகவும் ,  ஆற்றல் பொருளாகவும் மாறும்

2. ஒரு பொருளை ஆற்றலாக மாற்றும்போது கிடைக்கவேண்டிய முழு ஆற்றலின் அளவையும் கணக்கிட முடியும். 

  எளிமையாக சொல்ல வேண்டுமெனில் , ஒரு மரத்துண்டை எரிக்கும்போது கிட்டும் சக்தி இந்த சமன்பாட்டை ஒத்துப்போகாது ஏனென்றால், அவை முழுமையாக எரிக்கப்படாமல் கரியாகவும், சாம்பலாகவும் மிச்சம் இருக்கும்.  இது மிகச் சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டது. இதே கணக்கீட்டை வைத்துதான் ஒரு பொருளின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் அணுவை பிளக்கும் யுக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. அணுவை பிளக்கும் முன் செறிவூட்டும் முறைகள் புகுத்தப்பட்டன. செறிவூட்டுவதால் ஒரு பொருளின் எடையை அதிகரிக்க முடியும். எனவே ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
மிகவும் செறிவூட்டப்பட்ட மூலக்கூறுகள் விண்மீன்களில் இருக்கின்றன. எனவேதான் அவை ஓளியையும் வெப்பத்தையும் அதிகமாக வெளியிடுகின்றன. நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியன் ஆகும்.

போகருடைய குறிப்புகளில் கனநீர் தயாரித்ததாக உள்ளன. சாதாரணமாக 100மிலி நீர் இருக்கும் எடையைவிட கன நீர் பல ஆயிரம் மடங்கு எடை அதிகம் உள்ளதாகவும் யாராலும் தூக்க முடியாத அளவிற்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அணு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முறைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் (மூலிகையை பயன்படுத்திதான்) அதனால்தான் தாமிரத்திலிருந்து தங்கம் உருவாகும் ரசவாத ரகசியங்கள் தெரிந்திருந்தனர்.

2. அண்டவெளி விரிவடைதல் சுருங்குதல் பற்றிய விளக்கம்

அண்டவெளி எனப்படும் universeன் மையத்தில் மிகுந்த அடர்த்தியுடன் கூடிய வாயு மூலக்கூறுகள் (ஹீலியம் போன்றவை) எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பொருட்கள் உந்தி வெளித் தள்ளப்பட்டுகின்றன. உ-ம், பறக்கும் பலூன்களை வெப்பத்தை பயன்படுத்தி விரிவடைய வைப்பதுபோல்.

அண்டவெளி விரிவடையும்போது மையப்பகுதியை விட்டு பயணிக்கும் வாயு மூலக்கூறுகள் குளிர்ந்து விண்மீன்கள், உருவானது. அவை  பருப்பொருளானது
மாறியது போக எஞ்சிய ஆற்றல் மற்ற பொருட்களையும் தன்னகத்தே இழுக்க முயற்சிக்க, அண்டங்கள் (Galaxy), கோள்கள்(planets) உருவாகின.
   
இதேபோல தலைகீழாக நடக்கும்போது விண்மீன்கள், அண்டங்கள், கோள்கள் ஆகியன மீண்டும் வாயு மூலக்கூறுகளாக மாற வாய்ப்பு உள்ளதல்லவா? இதனைத்தான் அண்டவெளி சுருங்குதல் என்கிறார்கள். மையத்திலிருக்கும் எரிதல் நின்றவுடன் ஏற்படும் வெற்றிடம்(black hole) அனைத்தையும் மீண்டும் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும்  நிலை வரும்போது. வெறும் வாயு மூலக்கூறுகளால் நிரப்பபட்ட ஆற்றல் மிக்க நெபுலா உருவாகும். 

உ-ம், ஓரிடத்தில் வளி மண்டல அழுத்தம் குறையும்போது அதன் அருகிலுள்ள மேகங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு புயல் உருவாகுவது போல.

3.  காலமாகிய நான்காவது பரிமாணம் பற்றிய விளக்கம்

   "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."


ஒவ்வொரு பொருளுக்கும் காலசுழற்சி என்பது உண்டு. அண்டவெளிக்கு இருப்பது போலவே தோற்றமும் மறைவும் மீண்டும் தோன்றுதலும். குறிப்பிட்ட நிகழ்வு எனப்படுவது அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பொருட்களுடைய காலமும் சேர்ந்ததுதான். 

ஒரு வேளை மதுரை வடக்கு வெளி வீதியில்...

    -  கிமு 200ல்
நான் கண்ணைமூடிக் கொண்டு சென்றிருந்தால் மிருகத்தின் வயிற்றுக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும். 
    -  நான் மூன்றாம் நூற்றாண்டில் கண்ணை மூடிக் கொண்டு சென்றிருந்தால் குறைந்த பட்சம் அரசனின் குதிரையின் உதை மட்டும் கிட்டியிருக்கும்.
    -  ஆனால் இப்போது சென்றால் எனக்கு மிக மோசமான விபத்து நேரிடலாம்.  ஏனெனில் அப்போது பேருந்து என்ற பொருளின் காலம் இல்லை.  வடக்கு வெளி வீதி, நான், பேருந்து இத்தனையும் சேர ஒரு காலம் வருகிறது அல்லவா அப்போது 'அந்த நிகழ்வு' ஏற்பட வாய்ப்பு வருகிறது. 

   விபத்து ஏற்படாமலும் போகலாமே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது இந்த கேள்வியை குறித்து வையுங்கள். பிறகு விளக்குகிறேன்.


15:56 | Author: சாகம்பரி
வெடித்து சிதறிக் கொண்டிருக்கும் நெபுலாவிலிருந்து உருவாகும் அண்டவெளி.
இப்போது நாம் கவனித்துக் கொண்டிருப்பது நான்காவது பரிமாணம் காலம் பற்றியே.

காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக கட்டுப்படுகின்றன இப்போது இன்னும் கேள்விகளை எழுப்பலாம். கால அளவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் சுழற்சி என்றொரு விசயம் உள்ளது. காலை பத்து மணி மீண்டும் வரும். ஆனால் தேதி மாறும். தேதி என்று நாம் குறிப்பிடுவது ஒரு ஒப்புமை நேரம் மட்டுமே. ஆங்கில வழிமுறையில் கிறிஸ்து பிறந்ததிலிருந்து முதல் வருடம் கணக்கிடப்படுகிறது. ஆனால் நம்முடைய தேடுதலுக்கு இந்த ஒப்புமை நேரம் பயன்படாது. ஒரு பொருளின் இருத்தல் என்பது அண்டவெளியில் அது இருக்கும் காலத்தை குறிப்பிடுகிற்து எனில் நம்முடைய காலத்தின் ஆரம்பமும் அண்டவெளியின் பிறப்பிலிருந்துதான் குறிப்பிடப்பட வேண்டும். எனவே நான்காவது பரிமாணமாகிய காலத்தை அண்டவெளியின் நேரமாக குறிப்பிடுவதுதான் சரி.

அப்படி பார்க்கும்போது ஒரு விசயம் புலப்பட்டது. அண்டவெளியின் உருவாக்கமும் முடிவும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதே அது.. நெபுலா எனப்படும் ஒரு பெரிய நெருப்பு உருண்டை வெடித்து சிதறியதில் உருவானதுதான் அண்டவெளி என்பது உங்களுக்குத் தெரியும். நெபுலா எப்படி உருவானது? அண்டவெளியின் முடிவில்தான். எப்படி?

கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள் (நாம் வசிப்பது பால்வெளி அண்டத்தில்) என்ற பலவாறான விண்வெளிபொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள அண்டவெளி தற்சமயம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இன்னமும் அதன் மையத்தில் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வெடிக்கும் பொருள் தீர்ந்துவிடும் ஒரு நாளில் அங்கே ஒரு வெற்று புள்ளி உருவாகும். வெற்றிடமானது சுற்றியுள்ள பொருட்களை தன்னிடம் மீண்டும் இழுத்துக் கொள்ளும். ரொம்ப சரி, வெளியே தள்ளப்பட்டதெல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் நெபுலா உருவாகும். சற்று அமைதியாக இருந்து மீண்டும் வெடிக்கும். அண்டம் முதல் நீங்கள்,நான்  வரை மீண்டும் அத்தனையும் அந்த அந்த காலக்கட்டத்தில் உருவாகும். இந்த கோட்பாட்டினை உலகம் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்....   

அண்டவெளியின் முடிவின் மாதிரி - மத்தியில் இருப்பதுதான் black hole எனப்படும் வெற்றிடம்

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பட்டினத்தார் 'பெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும்' என்றும்  'தோன்றின மறையும்... மறைந்தன தோன்றும்....' என்று இந்த சுழற்சியை  குறிப்பிடுகிறார்.

இதனையே கணிதக்குறிப்பாக சொல்லும்போது equal to =
என்ற குறியினை பயன்படுத்துகிறார்கள்.

இந்த
= குறிதான் எண்ணிலடங்கா கேள்விகளுக்கு விடை தந்த ஐன்ஸ்டைனின் சமன்பாட்டையும் முக்கியத்துவம் பெற்றதாக்கியது.


ரிக் வேதத்திலும் பிந்து(புள்ளி)வில் இருந்து அனைத்தும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதங்கள்தான் உலகத்தின் தோற்றத்தை பற்றிய கோட்பாடுகளை முதன்முதலில் குறிப்பிட்டிருக்கின்றன. இன்றைக்கும் அறிவியல் கணிப்புகள் இதனை ஒட்டியே நிருபிக்கப்பட்டு வருகின்றன.



எனில், அண்டவெளியின் தோற்றத்தை வைத்து இன்றைய நாளை குறிப்பிடமுடியுமா? இதுவும் நம்முடைய பூஜை முறைகளில் உள்ளது.

பூஜை ஆரம்பிக்கும் முன் சொல்லப்படுகின்ற சங்கல்பத்தை படியுங்கள்.

'த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே, ப்ரதமபாதே, ஜம்பூ த்வீபே,பாரத வர்ஷே, பரத கண்டே, சகாப்தே...' என்று சொல்லப்படும் மந்திர வார்த்தைகள் உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்றைய நாளினை குறிப்பிடுகிறது.

இப்போது ஆரம்பத்திற்கு செல்லுவோம். முதலில் நான் குறிப்பிட்ட இன்று காலை பத்து மணி உண்மையில் எனக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா? அப்போது கண்டிப்பாக நான் மதுரையில் என் வீட்டில்தான் இருப்பேன். ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். நாம் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 
நாம் மட்டுமல்ல அண்டவெளியில் உள்ள அத்தனை பொருட்களும். என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.

இந்த பதிவு சொல்லும் விசயத்தை ஒரே வாக்கியமாக சொல்ல வேண்டுமெனில் , அனைத்தும் ஏற்கனவே நடந்து பதிவு செய்யப்பட்டவை. நாம் அதனை மறுபடியும் தொடர்கிறோம்.
                               

இதே விசயத்தை வேறுமாதிரி சிந்திக்கவும் முடியும்.
'='  குறியினை பயன்படுத்தி பேசும்போது... இந்த நான்காவது பரிமாணமாகிய காலத்தின் பிடியில் நிகழ்வுகளும் அதன் தொடர்புடையவர்களும் உள்ளார்கள் எனில்   ஒரு நிகழ்வு சம்பந்தப்பட்டவற்றை செயற்கையாக இணைக்கும்போது அந்த காலகட்டத்திற்குள் செல்ல முடியுமா? மீண்டும் தொடர்வோம்.