கார்டுன் கதாபாத்திரங்களான மிக்கி மவுஸ், ஜெர்ரி எலிகள் பாடுவதை போல நிஜத்திலும் எலிகள் பாடத்தொடங்கிவிட்டன.... ஜப்பானை சேர்ந்த உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளரான அரிகுனி உஸிமுரா இதனை சாதித்துள்ளார்... அவர் மரபணு பொறியியல் மூலமாக மாற்றபட்ட எலிகள் (Genetically modified mouse) கொண்டு "Evolved Mouse Project" என்னும் ஆரய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியினால் ஏற்பட்ட மரபணு திடீர்மாற்றம் காரணமாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு புதிதாய் பிறந்த எலிகளில் தற்செயலாக ஒன்று மட்டும் பறவைபோல பாடும் தன்மை கொண்டுள்ளது எண்பதை கண்டறிந்துள்ளனர்.இப்பொழுது அந்த ஆராய்ச்சிகூடத்தில் 100 பாடும் எலிகளை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் மனித மொழி உருப்பெற்ற விதம் குறித்து நாம் அறிந்து கொள்ள உதவும் என்கிறார் உஸிமுரா ..... எலிகள் மனிதனை ஒத்த மூளை அமைப்பையும் உயிரியல் செயல்பாட்டினை புரியும் பண்புகளுடையது என்பதால் இது சாத்தியமே!.. உஸிமுராவிற்கு கனவே எதிர்காலத்தில் நிஜ மிக்கி மவுஸ் உருவாக்குவதுதானாம்.....
வருந்தும் குறிப்பு :
ஜப்பானிலுள்ள எலிகள் பாடுமளவிற்கு முன்னேறிவிட்டன..... நம் நாட்டிலுள்ள எலிகள் இன்னும் கதவுகளையும் சுவர்களையும்தான் சொரண்டி கொண்டிருக்கின்றன!
தமிழர்க் கலை என்னும் இப்பகுதியில் முந்தைய காலத்தில் நம் மக்கள் உருவாக்கிய, பயன்படுத்திய, பின்பற்றிய கலைகலைப் பற்றி காண்போம். இன்றைய படைப்பில் கூத்துக்கலை பற்றியும் அதில் உள்ள உட்பிரிவுகள் பற்றியும் காண்போம்.
ஆடற்கலை என்னும் கூத்துக்கலை பழமை வாய்ந்தது. இசைக் கலையுடன் நெருங்கிய தொடர்புடையது. வாயினால் பாடப்படும் இசைப்பாட்டுக்கு செந்துறைப் பாட்டு என்றும், கூத்துக்கலைக்குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு. பண்டைக் காலத்தில் 'தெய்வ விருத்தி' என்னும் ஆட்டம் தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டது. இவை பதினொரு வகைப்படும்.
கூத்துக்கலையின் வகைகள் அதன் விளக்கங்கள் பற்றி அடுத்த பதிப்பில் காண்போம்.
எந்த பிறவி என்றாலும் மானுடம் போல் வருமா? தனக்கு செய்த உதவிக்காக உயிரையும் துட்சமென அவர் தம் செய்த உதவிக்காக அவர்களுக்காக நீத்த பல உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்து மடிந்த பூமி நம் தமிழ் மண் என்றால் அதில் மிகையில்லை. கெளரவர்களுக்காக கர்ணனும், பாரிக்காக கபிலரும் தங்கள் உயிரை செய்ந்நன்றிக்காக நீத்தனர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. . .
குறள் "காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிரியதாக இருந்தாலும் பயன்பாட்டு நிலையில் உலகத்தைவிட மிகப்பெரியது.
குறள் "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
எத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே கிடையது
மனிதத்தில் சமூகம் என்ற அமைப்பே ஒருவருக்கொருவர் பலவற்றையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதாலும் திரும்பப்பெருதலாலும் தான் சமனிலை பெருகின்றது.
உன்னை பிரிந்த
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகலாலும் தான்
வலுப்பெருகின்றன . . .
ஒவ்வோரு 2 நொடிக்கு, நம் தேசத்தில் ஒரு நபருக்கு இரத்தம் தேவைப்படுகிறது......
ஒரு ஆண்டில் நம் தேசத்திற்கு 180 கோடி மில்லி இரத்தம் தேவை...... ஆனால் வெறும் 20 கோடி மில்லி இரத்தமே பெறமுடிகிறது......
நம்மவர்களில் பலபேர் இரத்த தானம் செய்வதால் தமக்கு ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற பயத்தின் காரணமாக இரத்த தானம் செய்ய முன்வருவதில்லை.
ஒரு மனித உயிர் காக்கும் இரத்த தானம் செய்வதால் இரத்த தானம் பெறுபவருக்கும் நன்மை...
இரத்த தானம் செய்யும் அன்பருக்கும் நன்மையே......
ஆம், இது அறிவியல்புர்வமாக நிருப்பிக்கபட்ட உண்மையே
இதோ அதற்கான பதில்கள்.........
இருதயநோய்கான பாதிப்புகள் குறைவு...
நமது உடலிலிருக்கும் அளவுக்கு அதிகமான இரும்புசத்தின் காரணமாக கொழுப்புசத்து இதயத்திற்கு செல்லும் இரத்தகுழாய்யில் அடைந்துவிடுவதன் காரணமாக இருதய பாதிப்பு, மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வருகின்றன.
ஒருவர் முன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு குறைகிறது. அதன் காரணமாக இரத்த தானம் செய்யும் தங்களுக்கு இருதயநோய் பாதிப்பின் அளவு 88% குறையும்.
புற்றுநோய் பாதிப்பின் அளவு குறைவு...
அடிக்கடி இரத்த தானம் செய்வதால் புற்றுநோய் பாதிப்பின் அளவு 66% குறையும்.
கொழுப்புசத்து குறைவு...
முன்று மாத இடைவேளையில் இரத்த தானம் செய்வதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புசத்து குறைவதால் நம்முடைய உடல் கட்டுகோப்பாகவும், எடை அதிகமாகமாலும் இருக்க உதவும். 450மில்லி இரத்த தானம் செய்வதால் 650கலோரி குறையும்.
புதிய இரத்தம் உருவாக்கம்...
இரத்த தானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புது இரத்தம் உற்பத்தி செய்யபட்டுவிடும். அதேபோல் புதிய சிவப்பு இரத்த அணுக்கள் 4-8 வாரங்களில் உருவாகிவிடும். இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதுகாக்கபடும், புத்துணர்ச்சியும் புதுதெம்பும் கிடைக்கும்.
இரத்த பரிசோதனை.....
இரத்த தானம் செய்வதற்கு முன்னால் இரத்தபரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தங்களுடைய எடை, ரத்த கொதிப்பின் அளவு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். அதேபோல மஞ்சள்காமாலை, மலேரியா, ஹேச்.ஐ.வி போன்ற நோய்களை அரம்ப நிலையிலேயே அறிந்துகொள்ள உதவும்.......
நம் தேசத்திலுள்ள 100 கோடி மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதையும் தடுத்து விடலாமே!
மற்றவர்களுக்கு எந்த கெடுதலும் நினைக்காமலும் தன்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் தமிழ் மறபில் அதிகம்.
குரல் "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந்து அற்று"
ஒருவருடைய நிழல் அவரை விடாது தொடர்ந்து நிற்பது உறுதி; அதுபோல், தீமை செய்தவரும் கெடுவது உறுதி.
"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு"
மறந்தும் கூடப் பிறருக்குத் தீங்கு நினைக்காதே; ஏனெனில், தீங்கு நினைப்பவர்க்கு அறமே தீங்கு நினைக்கும். என்கின்றார் வள்ளுவர்.
தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த பண்பு விருந்தோம்பல், பண்டைய காலத்தில் பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே காணப்பட்டன, எனவே விருந்தினர்கள் அல்லது அடியவர்கள் யாரேனும் எப்பொழுதும் வந்தால் கூட அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு அளிக்கும் மனிதர்களும் அவர் தம் சமைத்த உணவும் குறையாமல் நிறைவாய் இருக்கும்.
குடும்பமாக இருந்து செல்வத்தை காப்பாற்றி வாழ்வது, விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்காகவே. என்று வள்ளுவர் தம் குரலில் சொல்லியுள்ளார்.
குரல்
"இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு"
விருந்து படைப்பதிலும் தனிச்சிறப்பு உண்டு, படைப்பவர்க்கும் சிறப்பு உண்டு.
விருந்து படைப்பவரின் தன்மை மாறுபட்டால் கூட விருந்தின் பயன் மாறிவிடும்
குரல்
"மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக்குலையும் விருந்து"
அனிச்சம் மலர் முகர்ந்து பார்த்த அளவில் வாடிவிடும்; ஆனால், முகம் திரிந்து பார்த்த அளவிலேயே விருந்தினர் வாடிவிடுவர்.
தமிழர் பண்பாட்டில் ஈகை ஒரு கடமையாக கருதப்பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை தீர்த்த பல செல்வந்தர்கள் தன்னலம் பாராமலும் செருக்கு இல்லாமலும் தேடிவந்த பலருக்கு தங்களால் இயன்றவரை அன்புக்கரம் நீட்டி இருக்கின்றனர். வள்ளுவர் தமது குரலில், ஏழைக்கு ஒன்று கொடுப்பதுதான் ஈகை எனப்படும்; மற்றவர் கையில் பொருள் கொடுப்பது எல்லாம் தனக்கு ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பனவாகும். என்று சொல்லி இருக்கின்றார்.
குரல்
"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து"
பண்டமாற்று முறை என்ற பழக்கமே மனிதனின் தேவை கருதி தான் வழக்கத்திற்கு வந்தது, பின் இந்த தேவை என்ற பயன்பாடு மட்டும் தொடர்ந்து ஈகை மறுக்கப்பட்ட பின் மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஆனால் ஈகை இன்றளவும் அதன் தன்மையில் பல நல்ல உள்ளங்களில் வழக்கில்லிருந்து கொண்டுதான் இருக்கின்றது. . .
இனிவரும் களங்களில் மாறிவிட்ட மறக்கடிக்கப்பட்ட நம் மரபுகளை நினைவு கூறுவோம். நன்றி. . .
உலகம் பார்க்கும்முன்
உயிர் வதையா. . .?
உயிர் பெறும்முன்
படுகொலையா. . .?
ஜீரண சக்தி அதிகரிக்க
ஜீவகாருண்யம் ஒளிவிளங்க
தாய்பால் கொடுப்பாளாம் தாயொருத்தி. . .
பிறப்பது பெண் என்று தெரிந்தபின்
பிறவாமையே நன்றென்று புரிந்து - பின்
கள்ளிப்பால் கொடுப்பாள் பாதகத்தி. . .
பிறக்கும் குழந்தையை கொல்லும்
அதிலும்அதிகம் பெண்களின் உள்ளம்
நடப்பதை இங்கு எண்ணுகையில்
கண்ணீர்கூட வரவில்லை. . .
கசிந்து வந்ததோ இரத்தமடா . . .
கல்விக்கு சரஸ்வதியாம். . .
செல்வத்திற்கு இலட்சுமியாம். . .
இணையற்ற வீரம்
ஈன்று தருபவள் பார்வதியாம். . .
மூட பெண்சிசுக் கொலைதடுக்க
முன் நிற்க வரும்
கடவுள் தான் யாரோ. . .?
என் குட்டி கவிதைக்கு
குரல் கொடுக்க நீயில்லை. . .
என் குழல் நாதங்களுக்கு
நடைபுனைய உன் பாதங்கள் இல்லை. . .
உன் புன்னகை பார்த்து மலர
இன்று நிலவு வானில் இல்லை. . .
உன்னை வருணிக்க வரிகள்
தேடினேன் கவிதை வரவில்லை . . .
கண்ணீர்துளிகள் வந்தன அன்பே இன்று
நீ என் அருகில் இல்லை . . .
நமது உடல் மொழி , சைகை, சிரிப்பு என சின்ன சின்ன விஷயங்களும் நம்மை இந்த உலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கும். அந்த சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்.... எப்போதும் சின்ன புன்னகை ஒன்றை அணிந்திருங்கள். பிறர் சொல்வதை கவனியுங்கள்,காது கொடுத்து கவனியுங்கள். பதில் மரியாதை எதிர்பாராமல் பிறருக்கு மரியாதை செலுத்துங்கள். அடிக்கடி எதிராளியின் கண்களுடன் தொடர்பு ஏற்படுத்திகொள்ளத் தவறாதீர்கள உங்களி்டம் யாராவது கேட்டாலொழிய, அறிவுரை வழங்காதீர்கள். சபையோர் முன் ஒருவரைப் பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது என்றால் , தனிமையில் கண்டியுங்கள். எப்போதும் தற்பெருமையோ, அதித ஆக்ரோஷத்தையோ வெளிபடுத்தாதிர்கள். நன்றி - அனந்த விகடன்
அனு ஆயுதம் ஒரு நாட்டின் எல்லைகளை வேண்டுமானால் பாதுகாக்கும். மனித இனத்தை பாதுகாகுமா என்றால் ? கேள்வியே மிஞ்சும்........
அனு ஆயுதம் என்பது அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெரும், வெடிப்பாயுதமாகும். மற்ற வெடி பொருட்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அனு ஆயுதத்தின் சக்தியும் ஆற்றலும் அதிகம்.
முதல் அனு ஆயுதம் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா முதலிய நாடுகளின் கூட்டு முயற்சியால் மார்கட்டன் திட்டம் (markattan project) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இந்த அனு ஆயுதம் அமெரிக்காவினால் இரண்டு முறை பயன் படுத்தப்பட்டுள்ளது (உலக வரலாற்றிலும் இரண்டு முறைதான்), இரண்டு தாக்குதல்களும் நாம் அறிந்த ஹிரோசிமா நாகசாகி சம்பவமே, இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர் இழப்பு பல ஆயிரம். பாதிப்பு இந்த தலைமுறையிலும் நீடிகின்றது. (இந்த அனு ஆயுதங்களின் பெயர் Little Boy & Fat மண்)
ஒரு நாட்டின் பாதுகாபிற்கும் வல்லரசு பயணத்திற்கும் அனு ஆயுதம் தேவை இல்லை. மாறாக அனு ஆயுதத்தை விடவும் சக்தி வாய்ந்த இளைஞ்கர்கள் நம் நாட்டிலும் மட்டற்ற நாடுகளிலும் உள்ளனர்.
உலக வெப்பமயமாதல் இந்த அனு ஆயுதத்தின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு தன்னுடைய அழிவை இந்த உலகத்திற்கு தர காத்திருக்கின்றது.
Little Boy & Fat man போன்றவற்றால் தேசியம் பாதுகாக்கப்படும். . . மனிதம் அழியும் . . .
காதல்மயக்கம்
தினமும் காலை ஒரு குவளை
மது அருந்துகிறேன்
ஆம் அது
உன் இதழ் தொட்ட
தேநீர் . . . ஏனடி என் நினைவில் நீங்காது இருக்கத்தான் மனதில் காயங்கள் ஏற்படுத்தினாயோ . . .
எனக்கு போதும் எத்தனை ஆண்டுகலானாலும் உனக்காய் காத்திருப்பேன் . . . நீ வருவாய் என்ற நம்பிக்கை - போதும் நான் உயிர் வாழ . . .